புடின் வரவேற்பில் யானைகள் இல்லை - ரஷ்ய மக்கள் ஏமாற்றம்
மாஸ்கோ:
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த வரவேற்பில் யானைகள் கலந்து கொள்ளாதது ரஷ்ய மக்களுக்குப்பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அஹித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் மீது ரஷ்யர்கள் அதிக ஆர்வமும், அன்பும் கொண்டவர்கள். இதை உணர்ந்தஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, 1955-ல் தனது முதல் ரஷ்யஅரசுமுறைப் பயணத்தின்போது இரு யானைக் குட்டிகளை ரஷ்யாவுக்குப் பரிசளித்தார்.
யானைச் சவாரி செய்வதற்காகவே பல ரஷ்யர்கள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், புடினுக்கு டெல்லியில்அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் யானைகள் பங்கேற்காதது ரஷ்ய மக்களுக்குபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் இளம் அதிபர், யானை மீது அமர்ந்து சவாரி செய்வதைதொலைக்காட்சியில் கண்டு ரசிக்க ரஷ்யர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால்,அத்தகைய நிகழ்ச்சி ஏதும் நடைபெறவில்லை.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் யானைகளுடன்சுதந்திரமாகப் பழகினார். யானைச் சவாரியும் செய்தார்.
அதேபோன்ற தங்களது அதிபரும் யானைச் சவாரி செய்வார் என்று ரஷ்யர்கள்எதிர்பார்த்தனர். பில் கிளின்டனின் பயணத்துடன் புடினின் பயணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த அந்த எதிர்பார்ப்பில் ரஷ்யர்கள் இருந்தனர்.
கிளின்டன் தங்கிய மவுரியா ஹோட்டலில் புடினும் தங்கினார். கிளின்டன் சென்றதாஜ்மகாலுக்கும் மனைவியுடன் புடின் சென்றார். அதேபோல் கிளின்டனைப் போலவேபுடினும் தனது பயணத்தை மும்பையில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஆனால், கிளின்டன் மேற்கொண்ட யானைச் சவாரியை புடின் மேற்கொள்ளவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications