தமிழகத்தில் மேலும் ஒரு சாப்ட்வேர் பூங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் சாப்ட்வேர் பூங்காவைப் போல்தமிழகத்தில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறதுஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அரசு நிர்வாகம் முழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்குவது குறித்து மாவட்டகலெக்டர்கள் மற்றும் அலுவலர்கள் மாநாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இம் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது:

1996-ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றக் கொண்ட பிறகு தமிழகத்தில் பல்வேறுதுறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு வருகின்றன. நிர்வாகத்தின் செயல்பாடுவிரைவாகவும், திறமையாகவும் இருக்கும் வகையில் இந் நடவடிக்கையை அரசுமேற்கொண்டுள்ளது.

அதற்கு ஏற்ற வகையில்தான் புதிய தொழிற்கொள்கைகள் வகுக்கப்பட்டன.ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கவேண்டும் என்பதுதான்இந்த அரசின் கொள்கை.

தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் உடனுக்குடனும்,தெளிவாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ளும் வகையில்தான் அரசுஆணைகள், விளம்பரங்கள், டெண்டர்கள் போன்றவை இன்டர்நெட்டில்வெளியிடப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தனிக் கொள்கையை வகுத்து இந்தியாவிலேயேதமிழகம் முதலிடம் வகிக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மற்றமாநிலங்களை விட முன்னணியில் உள்ள மாநிலம் தமிழகம்தான்.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குசாதமாக நிறைய அம்சங்கள் உள்ளதையும் கண்கூடாகக் கண்ட பல வெளிநாட்டுநிறுவனங்கள் தமிழகத்தில் ஏராளமாக முதலீடு செய்துள்ளன.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குத் தேவையான மனிதவளத்தைப் பெருக்கும்வகையில் பொறியியல் கல்வியில் புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் என்ற இந்த பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் தமிழகம்முழுவதும் உள்ள 160 பொறியியல் கல்லூரிகளில் 45,500 மாணவ, மாணவியர்தேர்ச்சி பெறுகின்றனர்.

அதே நேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியன் மூலம்தகவல் தொழில்நுட்பத் துறையில் நடுத்தர நிலையில் தேவைப்படும்பணியார்களையும் உருவாக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் ஆண்டுக்கு ஏறத்தாழ 1 லட்சம் மாணவ,மாணவியர் கம்ப்யூட்டர் அறிவு பெற்று வெளிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

1996-ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த சாப்ட்வேர் உற்பத்தி நிறுவனங்களின்எண்ணிக்கை 34 தான். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 600-க்கும் மேல்உயர்ந்துள்ளது.

1995-96-ல் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சாப்ட்வேர்களின் மதிப்பு ரூ.37 கோடி. கடந்த 4 ஆண்டுகளில் இந்த மதிப்பு 52 மடங்கு அதிகரித்து 1999-2000-ம்ஆண்டில் ரூ.1914 கோடியாகியுள்ளது.

சென்னையில் ஜூலை மாதம் திறந்து வைக்கப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தில் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு சாதனை மகுடமாகத் திகழ்கிறது.

உலகின் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்த டைடல் பார்க்கில் தங்களது கிளைஅலுவலுகங்களை அமைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் மென்பொருள் உற்பத்திஅதிகரிப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பும் பெறும் சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

டைடல் பார்க்கைப் போன்று மற்றொரு தகவல் தொழில்நுட்பப் பூங் சென்னை அருகேசிறுசேரியில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+