முன்னாள் அமைச்சர்கள் தவெகவில்.. எடப்பாடி முகாமில் புதிய அரசியல் கணக்கு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக, அதிமுக கூட்டணி அமைத்து தடுக்க சதித்திட்டம் தீட்டியதாக புகார் கூறப்பட்டது. அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடிவு செய்வார் என்று முன்னாள் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூயசக்தி, தூய ஆட்சி என்று தவெக கூறியது. ஊழல் வழக்குகள் உள்ள முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்துள்ளனர். தவெகவும் ஊழல் படிந்த கட்சி தான். திமுக, தவெக இரண்டு கட்சிகளும் குதிரை பேரம் நடத்தியுள்ளது. தவெக குதிரை பேரம் நடத்தவில்லை என்றால், எப்படி அதிமுகவில் இருப்போர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஐந்தாவது நிமிடத்தில் தவெகவில் இணைய என்ன காரணம்.

sasikala-ttv-dinakaran-likely-to-join-admk-soon-said-kc-karupanan

ராஜினாமா செய்து வீட்டிற்கு சென்றால் பரவாயில்லை. ஒரு வருடம், இரண்டு வருடம் ஆனால் கூட பரவாயில்லை. உடனடியாக தவெகவில் இணைவதை வேறு எப்படி சொல்ல முடியும்.
யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம். இருக்கும் எல்லோரும் ஒன்றிணைய போகிறோம். கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாருங்கள். இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கும். யார் வருகிறார்கள் என்பதை பொறுத்துதான் சொல்ல முடியும். டிடிவி தினகரன் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் உள்ளார்.

சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இணைய வேண்டும் என்று எங்கள் விருப்பம். அவர்களை இணைப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் பேசி முடிவு செய்வார். தவெகவில் இணைந்த 4 பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். அப்படி பிரிந்த சென்ற பலர் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள். தவெகவுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் மனதில் வேதனையுடன், வெந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் கட்சி மாறினோம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புள்ளது

அரசியலில் எல்லாமே சாத்தியம் தான். எப்படி ஒன்றை நடக்காது என்று கூற முடியும். விரைவில் நல்ல நல்ல செய்தி கிடைக்கும்" என்றார். இதனால் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+