கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிய கிராமப் பெண்கள்
பெரம்பலூர்:
அரியலூர் அருகே கிராமத்தில் பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டியுள்ளனர்.இதையடுத்து இந்த ஊர் கள்ளச் சாராயம் இல்லாத கிராமம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச் சாரய சாவுகளும் தொடர்ந்துகொண்டே உள்ளன.
இந் நிலையில் அரியலூர் அருகே உள்ள மேலராமநல்லூர் கிராமம் கள்ளச் சாராயம் இல்லாத கிராமமாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இங்கேயும் சில மாதங்களுக்கு முன் வரை கள்ளச்சாரயம் விற்கப்பட்டுத் தான் வந்தது. அரசு நிர்வாகத்தால் கூடஅதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து பெண்களே ஒன்று சேர்ந்து கள்ளச் சாராயத்துக்கு எதிராக போர்க் கொடி எழுப்பினர். இவர்களுக்குநேரு யுவ கேந்திராவின் இளைஞர்களும் உதவி புரிய கள்ளச் சாராய வியாபாரிகளை ஊரை விட்டேவெளியேற்றிக் காட்டியிருக்கிறது இந்த கிராமம்.
இந்த கிராமத்துக்கு கள்ளச் சாராயம் இல்லாத கிராமம் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார் காவல்துறை மதுவிலக்குப்பிரிவுத் தலைவர் நடராஜ். ஊருக்குள் மாட்டு வண்டியில் மட்டுமே போக முடியும் என்பதால், தனது அரசு காரைஊருக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு மாட்டு வண்டியில் ஏறிச் சென்று இந்த கிராமத்தை கெளரவப்படுத்தினார்நடராஜ்.
பதிலுக்கு அவரை பூர்ணகும்ப மரியாதையுடன் ஊருக்குள் அழைத்துச் சென்றது அந்த வெற்றிக் கிராமம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications