யுகோஸ்லோவியா: நான் தான் ஜனாதிபதி- எதிர்க் கட்சித் தலைவர் அறிவிப்புபாதாள அறையில் பதுங்கினார் இப்போதைய அதிபர்
பெல்கிரேட்:
யுகோஸ்லோவிய எதிர்க் கட்சித் தலைவர் கோஸ்டுனிகா தன்னை அதிபராக அரிவித்துக் கொண்டுள்ளர். இதுவரைஅதிபராக இருந்த மிலாசோவிக் தனது சொந்த ஊரான செர்பியாவில் பாதாள அறையில் பதுங்கி இருக்கிறார்.
மிலோசவிக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கோஸ்டுனிகா
கடந்த மாதம் நடந்த தேர்தலில் மிலோசவிக்கின் கட்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஆனால், அதைமறைத்துவிட்டு அவர் ஆட்சியில் தொடர்ந்து வருவதாகவும் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முக்கிய எதிர்க் கட்சிக்கு 55 சதவீத ஓட்டுக்களும் மிலாசோவிக்குக்கு 33 சதவீத ஓட்டுகளும் விழுந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கோஸ்டுனிகா கூறுகிறார். இவருக்கு பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், தனது கட்சிக்கு 48 சதவீத வாக்குகளும், எதிர்க் கட்சியினருக்கு 41 சதவீத ஓட்டுகளும் கிடைத்ததாகமிலோவிக் கூறி வருகிறார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை மிலோசவிக் திரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துஅவரை பதவி விலகக் கோரி கடந்த 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் எதிர்க் கட்சியினரும்ஆர்பாட்டாக்காரர்களும் வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கில் நுழைந்தனர்.
பின்னர் நாடாளுமன்றத்துக்கு தீ வைத்தனர். ஆர்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்தமோதலில் பல ராணுவத்தினர் காயமடைந்தனர்.
ஆர்ாட்டக்காரர்கள் டிவி நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தீ வைத்தனர். முன்னதாக செர்பியாவிலிருந்துநூற்றுக்கணக்கான கார்களில் மிலோவிக் ஆதரவாளர்கள் பெல்கிரேட் வந்தனர்.
அதிபர் மிலோசவிக்குக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. ஆயிரக்கணக்கானதொழிலாளர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும்போராட்டத்தில் குதித்துள்ளதால், நாடு முழுவதும் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசுத் தொலைக்காட்சி நிலையத்தை எதிர்க் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் எடுத்துக்கொண்டுள்ளது. இந்தப் போராட்டஙகளின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் ரகசிய பிரிவுகள் இருக்கலாம்எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
பாதாள அறையில் பதுங்கியுள்ள அதிபர்:
தனக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் அதிபர் மிலோசவிக் செர்பியாவில் பாதாளஅறையொன்றியில் ராணுவத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ருமேனியா-பல்கேரிய எல்லைகளுக்கு அருகே பெல்ஜானிகா என்ற கிராமத்தில் இந்த பாதாள அறை இருப்பதாகக்கூறப்படுகிறது. ராணுவத்தின் 92-வது இன்பானட்ரி பிரிவும் மேலும் சில பிரிவுகளும் சேர்ந்து அவரை பாதுகாத்துவருகின்றன.
அவர் ராணுவத்தின் உதவியுடன் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.
மிலோசவிச் பதவி விலக பிரிட்டன் கோரிக்கை:
இந் நிலையில் மிலோசவிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என பிரிட்டிஷ பிரதமர் டோனி பிளேய்ர்கோரியுள்ளார்.
தேர்தல் முடிவுகளும், மக்களின் போராட்டமும் மிலோசவிக்குக்கு எதிராக உள்ளன. இதை உணர்ந்து மிலோசவிக்உடனே பதவி விலக வேண்டும். மேலும் உயிர் பலிகள் ஏதும் நடப்பதற்கு முன் அவர் பதவி விலக வேண்டும்எனறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications