For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்திய விமானப் படைக்கு 68 வயது
டெல்லி:
இந்திய விமானப் படை தனது 68-வது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமைகொண்டாடுகிறது.
இது தொடர்பாக தலைநகர் டெல்லியில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விமானப் படையின் சூர்ய கிரன் பிரிவினர் வான் சாகச நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டினர்.
விமானப் படையில் உள்ள நவீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நவீன ரேடார்கருவிகள், தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் அணிவகுப்புநடைபெற்றது.
அணிவகுப்பு மரியாதையை விமானப் படை தலைமை அதிகாரி ஏ.ஒய்.டிப்னிஸ்ஏற்றுக் கொண்டார். தென் ஆப்பிரிக்க விமானப் படைத் தலைவர் ஆர்.ஜெ. பியூக்ஸ்சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வான் சாகச நிகழ்ச்சியையும்,அணிவகுப்பையும் கண்டு களித்தார்.
Comments
Story first published: Sunday, October 8, 2000, 5:30 [IST]