கோவையிலிருந்து ஐரோப்பாவுக்கு நேரடி சரக்கு விமானப் போக்குவரத்து
கோவை:
கோவையிலிருந்து முதல் முறையாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்குதனியார் சரக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமானப் போக்குவரத்தை ஐஸ்வர்யா விமான சர்வீஸ் கம்பெனிதொடங்கியுள்ளது. இதுவரை கோவையிலிருந்து சார்ஜா போன்ற நாடுகளுக்குப்பயணிகள் விமானம் மட்டுமே இயக்கப்பட்டது.
இப்போது தொடங்கப்பட்டுள்ள தனியார் விமான சரக்குப் போக்குவரத்தால் திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பயன்பெறமுடியும்.
கோவையிலிருந்து மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குவாரம் இரு முறை இந்த விமான சர்வீஸ் இருக்கும்.
பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் இருந்தும் தனியார் துறையில் இத்தகையசரக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்க ஐஸ்வர்யா விமான சர்வீஸ் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந் நிறுவன இயக்குநர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையிலிருந்து புறப்படும் இந்த சரக்கு விமானம் நேரடியாக சார்ஜா, ஐரோப்பிமற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கிறது.
18 டன்கள் எடையுள்ள இந்த சரக்கு விமானத்தில் 15 டன் சரக்குகளை ஏற்றிச்செல்லலாம். கோவையிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்குவிமானம் புறப்படும்.
பனியன் ஏற்றுமதியாளர்கள், மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் இந்த விமானசர்வீஸைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.93-ம்,அமெரிக்க நாடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.143-ம் கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவிலிருந்து திரும்பும்போது திருவனந்தபுரம், கோழிக்கோடு வழியாககோவையை விமானம் வந்தடையும். இதன் மூலம்
கேரள மாநிலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களும் பயன்பெறுவர் என்றார் பாலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications