சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வர மும்பை போலீஸ் நடவடிக்கை
மும்பை:
தாய்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் மும்பை தாதா சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில்மும்பை போலீஸார் ஈடுபட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஜக்கன் புஜ்பல் தெரிவித்தார்.
மும்பை தாதாவான சோட்டா ராஜன், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மற்றொரு மும்பை தாதாவான தாவூத்இப்ராஹிம் கூட்டாளிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதையடுத்து பாங்காக் மருத்துவமனையில் சோட்டா ராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இந் நிலையில், போலிபாஸ்போர்ட்டுடன் தாய்லாந்துக்குள் நுழைந்ததாக சோட்டா ராஜனை தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
சோட்டா ராஜன் மீது மும்பையில் பல வழக்குகள் உள்ளன. அதற்காக அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரமும்பை போலீஸார் முயன்றனர். ஆனால், அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளது. அவ் வழக்கு முடியும்வரை அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று தாய்லாந்து போலீஸார் கூறிவிட்டனர்.
இருப்பினும், அவரை மும்பைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மும்பை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகசக்ணீன் புஜ்பல் கூறியுள்ளார்.
விசாரணைக்காக ஆட்களை அழைத்துச் செல்ல தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும்இல்லை. இதனால், பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் இருந்து விசாரணைக்காக ஒரு நபரை அழைத்து வருவது என்பது சிக்கலான விஷயம். சோட்டாராஜன் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உக்ஷPadma_vowelsn_Iதுறை அமைச்சர் அத்வானிஆகியோரைத் தொடர்பு கொண்டு பாங்காக் ஹை கமிஷனுடன் பேசும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.
போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்குச் சோட்டா ராஜன் சென்றுள்ளார். ஆகவே, அவரை எந்த நாட்டையும்சாராதவர் என்ற முறையில் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மும்பை போலீஸார் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தாய்லாந்து அரசுக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார் ஜக்கன் புஜ்பல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications