திருப்பூரில் அக்.17-ல் கோடைகால பனியன் கண்காட்சி
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில், கோடைகால பனியன் கண்காட்சி அக்டோபர் 17-ம்தேதி தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் மற்றும் ரெடிமேட்ஆடை ஏற்றுமதிக் கழக இயக்குநர் ரெட்டி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோட்டாமுறையால் ஏற்றுமதியின் அளவு குறைந்துள்ளது. சர்வதேச வர்த்தகதாராளமயாக்கலின்போது ஏற்றுமதி அதிகரிக்கும்.
திருப்பூரில் வரும் அக்டோபர் 17-ம் தேதி கோடை கால பனியன் காண்காட்சிதுவங்குகிறது. இந்தக் கண்காட்சியில் 52 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.
உள்நாட்டு வர்த்தகர்கள் தவிர 31 வெளிநாட்டு வர்த்தகர்களும் கலந்து கொள்கின்றனர்.லூதியானா, பெங்களூர், சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் நடைபெறும் இக்கண்காட்சியில்தான் நேரடியாக வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.
50-க்கும் மேற்பட்ட உள்ளூர் பனியன் உற்பத்தியாளர்கள் இக் கண்காட்சியில் தங்களதுஆடைகளை கண்காட்சிக்கு வைக்கின்றனர். தற்போதுள்ள சர்வதேசப் போட்டியில்,பனியன் ஆடை ஏற்றுமதியில் விலையும் ஒரு காரணியாக உள்ளது.
வியட்நிாம், கம்போடியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரே சாதகமான சூழ்நலை, இங்குமூலப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது தான். எனவே, சர்வதேச அளவின்தேவையைச் சந்திக்கும் அளவிற்கு திருப்பூர் தயாராக உள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளில் 47 சதவீதம் திருப்பூரிலிருந்துஏற்றுமதியாகிறது. திருப்பூரிலிருந்து ஏற்றுமதியின் அளவு வளர்ச்சி பெற்றுவந்தபோதிலும், ஐரோப்பிய யூனியன்களில் உள்ள கோட்டா முறையால் ஏற்றுமதிபாதிப்படைந்துள்ளது.
எனவே, திருப்பூரின் ஏற்றுமதி 60 சதவீதம் மறைமுக ஏற்றுமதியாகவே இருந்துவருகிறது. அடுத்து வரும் சர்வதேச வர்த்தகத் தாராளமயமாக்கலின்போது, ஏற்றுமதிஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நேரடி ஏற்றுமதியின் அளவு 10 சதவீதம் அதிகரித்துள்ளதுஎன்றனர் அவர்கள்.


Click it and Unblock the Notifications
