ராஜினாமாவை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றது மாபெரும் தவறு
கல்கத்தா:
ராஜினாமாவை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றது அரசியல் ரீதியில் மாபெரும் தவறுஎன்று இடது சாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரிணமூல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் அக் கட்சியின் மற்றொரு தலைவர் அஜீத்குமார் பாஞ்சாவும் தங்களது மத்திய அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இதனால், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பெரும்நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ராஜிநாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படிமம்தா பானர்ஜியிடம் பிரதமர் வாஜ்பாய் பேசினார்.
மேலும், தான் விரைவில் கால் மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளதாகவும், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பெட்ரோல் விலை உயர்வுகுறித்து மீண்டும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து தனது ராஜினாமாவை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றார். அவர் மீண்டும்மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமையே அவர்அமைச்சர் பணியை மேற்கொண்டார்.
அதே நேரத்தில், இப்போதைக்கு ராஜிநாமாவை நான் வாபஸ் பெற்றுக் கொண்டேன்.அவெை சிகிச்சைக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்வு பற்றி பிரதமர் வாஜ்பாய் நல்லமுடிவு தெரிவிக்கவில்லை என்றால் மீண்டும் ராஜிநாமா செய்துவிடுவேன் என்று மம்தாபானர்ஜி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, மம்தா பானர்ஜி தனது ராஜிநாமாவை வாபஸ் பெற்றது அரசியல்ரீதியில் பெரிய தவறு என்று இடது சாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
மம்தா பானர்ஜியின் இந் நடவடிக்கை அரசியல் நாடகம் என்றும் அவர்கள்கூறியுள்ளனர். மம்தா பானர்ஜியின் இந் நடவடிக்கை மேற்கு வங்க சட்டப்பேரவைக்குஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும்என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை பிரதமர் வாபஸ் பெற்றால் அது மம்தாபானர்ஜிக்கு பெரிய வெற்றியாக அமையும். அதே நேரத்தில் விலையை அவர்குறைக்கவில்லை என்றால் அது மம்தா பானர்ஜிக்குப் பெரும் பிரச்சினையாகஅமையும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியா ரஞ்சன் தாஸ் முன்ஷிதெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டதன் மூலம்பாஜகவுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையைபாஜகவின் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியேமேற்கொண்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் செயலர் அனில் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக மம்தா பானர்ஜிஅறிவித்தவுடனேயே அது அரசியல் நாடகம் என்று நினைத்தேன். இப்போது அந்தநாடகம் முடிந்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications