பக்தர்கள் ரத்தம் சொட்டச்சொட்ட ஒரு திருவிழா..!
கோவை:
கோவையில் உள்ளாமலிங்க சவுடேஸ்வரி கோயில் திருவிழா, பக்தர்களின்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் உடலில் கை, மார்பு, கால் பகுதிகளில் கத்தியால் கீறிக் கொண்டுரத்தம் சொட்டச் சொட்ட சவுடேஸ்வரி அம்மனை தரிசித்து வருகின்றனர்.
தசரா பண்டிகையையொட்டி இத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அத்தகையதிருவிழாவின் கடைசி நாள் சனிக்கிழமை (அக்டோபர் 7-ம் தேதி)கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முக்கியமானகத்திபோடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கத்திபோடும் நிகழ்ச்சியில் பங்கேற்போர், ஒரு நாள் முழுவதும் விரதம்மேற்கொள்கின்றனர். விரத நாளன்று ஒரு வாழைப்பழம், பால் மட்டுமே சாப்பிட்டுமறுநாள் அதிகாலையிலேயே கத்திபோடத் தயாராகி விடுகின்றனர்.
கத்திபோடும் நாளன்று ஆவாரம் செடியை நட்டு அதற்கு அபிஷேகம் செய்துவழிபடுகின்றனர். பின்னர் திருமஞ்சன நீர், கத்தி போன்றவைகளைப் பூஜித்துவழிபடுகின்றனர்.
பின்னர் வெற்று மார்பில் கத்தியால் கீறிக் கொள்ளத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு ஊர்வலத்தைத் துவக்குகின்றனர். அப்போது அம்மன் அழைப்பு நடக்கிறது.
இந்த அழைப்பின்போது தங்கள் உடலை வருத்திக் கொள்ள, "வேசுக்கோ, தீசுக்கோ(வாங்கிக்கோ, ஏற்றுக் கொள் என்ற பொருளில்) கோஷமிட்டபடி கத்தியால் உடலைக்கீறுகின்றனர். ஊர்வலத்தில் நடந்தவாரே ரத்தம் சொட்டச் சொட்ட உடலை அவர்கள்கத்தியால் கீறிக் கொள்கின்றனர்.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஊர்வலம் நடக்கிறது. கோவை சாய்பாபாகாலணியில் துவங்கிய இந்த ஊர்வலம், பூ மார்க்கெட்டில் உள்ள ராமலிங்கசவுடேஸ்வரி கோயிலில் முடிவடந்தது.
இந்த கத்திபோடும் நிகழ்ச்சியின் பின்னணி வரலாறு:
முன்னொரு காலத்தில் தேவமுனி என்பவர் பூலோகத்துக்கு துணி நெய்ய வந்தார்.அப்போது அசுரர்கள், அவர் தங்கிய இடத்தில் வந்து அவர் துணி நெய்வதற்குவைத்திருந்த தாமரை நூலைப் பறித்துக் கொண்டனராம்.
அப்போது சவுடேஸ்வரி அம்மன் காட்சி தந்து இந்த நூலை மீட்டுக் கொடுத்ததாராம்.இதனால் மகிழ்ந்து போன தேவமுனிவர், அம்மனுக்கு கோயில் கட்டி வைத்து அதில்வந்து அம்மனைத் தங்க அழைத்தார்.
சவுடேஸ்வரி அம்மன் ஒரு நிபந்தனை விதித்தார். நீங்கள் அனைவரும் முன்னால்செல்லுங்கள், நான் உங்களைப் பின்தொடர்ந்து வருவேன். எந்த இடத்தில் நீங்கள்திரும்பிப் பார்த்தாலும், அந்த இடத்திலேயே நான் தங்கி விடுவேன் எனக் கூறினார்.
பின்தொடர்ந்த அம்மனின் கால் சலங்கை ஒலியைக் கேட்டுக் கொண்டே முனிவரும்,பக்தர்களும் முன்னே சென்று கொண்டிருந்தனர்.
வழியில் ஒரு நீரோடை குறுக்கிட்டது. அனைவரும் முன்னால் சென்றனர். சலங்கை ஒலிநின்று போனது. அம்மன் வரவில்லை எனத் திரும்பிப் பார்த்தனர். இதையடுத்துபின்தொடர்ந்து வந்த அம்மன் அங்கேயே தங்கி விட்டார்.
இதனால் வருத்தமடைந்த பக்தர்கள் தாங்கள் திரும்பிப் பார்த்ததற்காக வருந்திகத்தியால் தங்கள் உடலைக் கீறிக் கொண்டனர். ரத்தம் சொட்டியது. தனது பக்தர்களின்துன்பத்தைப் பார்த்த அம்மன் மீண்டும் அவர்களுடன் சென்று தங்கியது.
இந்தக் கதையைப் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா பல நூற்றாண்டுகளாகநடந்து வருகிறது என கோயில் பெரியவர் நடராஜன் செட்டியார் கூறினார்.
கத்தியால் கீறிக் கொண்ட காயத்தைக் குணப்படுத்த அதன் மீது உடனே திருமஞ்சனப்பொடி என்ற மஞ்சள் கலந்த பொடியைத் தூவுகின்றனர். இந்தப் பொடியால் காயம்இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்த திருமஞ்சனப் பொடி 11 வகை மூலிகைகளால் ஆனது. இதனை எந்தக்காயத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நிர்வாக அறங்காவலர்செந்தில்ராஜ் தெரிவித்தார். ஆனால், இந்த 11 வகை மூலிகை மட்டும் ரகசியம் என்றார்அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications