அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், ஜெ. சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை (10ம் தேதி) கூடவிருந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது. அதே போல தென் மாவட்டங்களில் ஜெயலலிதா மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் முன்னரே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஆங்காங்கே மாவட்ட அளவிலும், ஒன்றிய நகரஅளவிலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல் துறையினர் கைது செய்து விட்டனர்.
தீர்ப்பு வெளிவரும் முன்னரே தொடங்கிய இந்த கைது நடவடிக்கை தீர்ப்புக்கு பின்னரும் தொடர்கிறது. அதிமுகவினரை கைதுசெய்யும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.
கருணாநிதி அரசு திட்டமிட்டே நாளை நடக்கவிருந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வந்து சேரமுடியாத செயற்கையான நிலையை உருவாக்க முயன்று வருவதால், பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 15ம் தேதி முதல் தென் மாவட்டங்களில் ஜெயலலிதா சுற்றுப் பயணம் செய்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.அந்த சுற்றுப் பயணத் திட்டத்தை சிறப்போடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது வெளியே வர முடியாத வகையில் பல்வேறு வழக்குகள் புனையப்பட்டுள்ளன. தென் மாவட்ட சுற்றுப் பயணத்தைசீர்குலைக்கும் வகையில் கருணாநிதி அரசு அதிமுகவினரை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
எனவே ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. மாற்றுத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications