பெண்ணிடம் ரூ. 3000 மோசடி .. போலி சாமியார் கைது
கோவை:
நள்ளிரவில் காளி பூஜை செய்வதாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பணம் மோசடி செய்தபோலிச் சாமியரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மசக்களிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி (54). இவரிடம் பலர் அருள் வாக்குகேட்க வந்து கொண்டிருந்தனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கபரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி, பலரிடம் மணி பணம் பறித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மணியிடம் செங்கோடான்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தசெல்வி (35) என்பவர் அருள் வாக்கு கேட்க வந்தார். செல்வி விதவைப் பெண். இவர்தனது மகள் மகேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது தாயாருக்கும்இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மணியிடம் கூறினார்.
போலிச் சாமியரான மணி, தாய்-மகள் சண்டைக்கு காரணம், ஒரு தாயத்து உங்களதுவீட்டின் முன்பு புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்திர தாயத்து செப்புத் தகடால்ஆனது. இதனை எடுக்க ரூ. 3 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். பணத்திற்கு ஏற்பாடுசெய் எனக் கூறி அனுப்பி வைத்தார்.
வீடு திரும்பிய செல்வி, 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு என்ன செய்வதென்று விழித்தார்.கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் செல்வி, வட்டிக்கு கடன் வாங்கிக்கொடுத்தார். பின்னர் மணி, செப்புத் தகடை எடுக்க நள்ளிரவில் பூஜை செய்யவேண்டும், இதற்கு தயாராக வரும்படி கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த செல்வி, பகலிலேயே பூஜை செய்து கொள்ளலாம்.இல்லையென்றால் பூஜையே வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடுங்கள் எனக்கேட்டுள்ளார்.
இதற்கு மணி, கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறியுள்ளார். செல்விபணத்தை திருப்பித் தர வற்புறுத்தவே, மணி மிரட்டத் தொடங்கினார். அவரது வீட்டில்தாயத்து வைத்து புதிய பிரச்னைகளை உண்டாக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த செல்வி, சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியைக் கைது செய்தனர். அவரது வீட்டில்போலீசார் சோதனை நடத்தினர். இதில், பூஜைக்கு பணம் கொடுத்து ஏமந்தவர்களின்பட்டியல், மற்றும் செப்புத் தகடுகள் கிடைத்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
மற்ற சாமியார்களைப் போல அல்லாமல், நவீன உடையில் மழு மழுவென சேவ்செய்து, காவி உடையில் இவர் மோசடி செய்து வந்துள்ளார். முன்பு தாடி வைத்திருந்தஇவர் .பிரேமானந்தாவின் கைதுக்கு பின்னர், தாடியை எடுத்து விட்டாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications