குடும்பத்தோடு ஓசி பஸ் பயணம் செய்யும் போலீசார்
சென்னை:
போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் அரசு பஸ்களில் ஓசிப் பயணம் செய்யக் கூடாது. அப்படி செய்து மாட்டிக் கொண்டால்அவர்களை காவல் துறை காப்பாற்றாது என்று சென்னை நகர போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து அனுப்பியுள்ள எச்சரிக்கை வருமாறு:
அரசு பஸ்களில் தங்களது குடும்பத்தினருடன் போலீசார் ஓசியில் பயணம் செயவது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.அவ்வாறு அவர்கள் பயணம் செய்யக் கூடாது. அது தவறானது.
பஸ் பயணம் செய்யும் போலீசார், கண்டக்டர்கள் கேட்கும்போது தங்களது அடையாள அட்டைகளை காட்டுவதில்லை.
அதுவும் தவறான செயல் தான். போலீசாரைத் தவிர அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அரசு பஸ்களில் ஓசிப் பயணம்செய்ய அனுமதியில்லை. போலீசார் தங்களது குடும்பத்தினருடன் பஸ்களில் ஓசியில் பயணம் செய்யக் கூடாது. டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும்.
போலீசார் தங்களுடன் வருபவர்களுக்கும் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் மாட்டிக் கொண்டால்,அவர்களை காப்பாற்ற காவல்துறை முன் வராது. பணி நிமித்தமாக பஸ் பயணம் செய்யும்போது போலீசார் கண்டிப்பாக சீருடைஅணிந்திருக்க வேண்டும்.
சீருடை இல்லாமல் பஸ்சில் செல்லும் போலீசார், கண்டிப்பாக தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றுஅவர் எச்சரித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications