காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் முன்வர வேண்டும்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, பிரதமர் வாஜ்பாய் ஹூரியத் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அகில இந்தியஹூரியத் அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் அப்துல் கனி தெரிவித்தார்.
ஹூரியத் அமைப்பின் சார்பில் ஸ்ரீநகரில் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு சுமார் 45 நிமிடம் உரையாற்றிய அப்துல் கனி லோன் பேசுகையில், இந்தியாமற்றும் பாகிஸ்தானுக்கிடையே பல வருடங்களாக தீர்வு காணப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல முறைமுயன்றும் தோல்வியே கிடைத்துள்ளது.
இப்பிரச்சனையினால் நாம் இதுவரை 75,000 பேரை பலி கொடுத்து விட்டோம். இனிமேலும் பலி கொடுப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.தற்போது தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர அவர் அனைத்துவகையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கும்போது, ஹூரியத் அமைப்பினருடன்பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறேதுமில்லை.
இதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்கள், காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இருநாட்டின் தலைவர்களும் இப்பிரச்சனையில் தங்களது பிடிவாத போக்கைத் தளர்த்தி விட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல வேண்டும்.
ஹூரியத் அமைப்பினர் யாரும் வன்முறையை விரும்பவில்லை. அமைதியான முறையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என்றார் அப்துல் கனிலோன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications