நிரம்பியது மேட்டூர் அணை .. முழுவீச்சில் மின் உற்பத்தி
கோவை:மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதையடுத்து இங்கு மின்சார உற்பத்தி முழுவீச்சில் தொடங்கியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை செய்து வருவதைத் தொடர்ந்துமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடாகவில் உள்ளகிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
இதையடுத்து காவிரியின் துணை நதியான கபினி ஆற்றிலும் நீர் அதிகரித்தது. காவிரிஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 44 ஆயிரத்து 592 அடியாக இருந்துவருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூர் அணை தனது கொள்ளளவான120.32 அடியில், 120 அடியை எட்டிப் பிடித்து நிரம்பியது. அணைநிரம்பியதையடுத்து அணைத்து மதகுகளின் வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது மொத்த நீர் மின் உற்பத்தியான360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர்தேவை பூர்த்தியடைந்துள்ளதையடுத்து தஞ்சை, திருச்சி விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டில் இதே நாளில் 24.51 டி.எம்.சி தண்ணீர் மட்டுமேஇருந்தது. தற்போதுள்ள தண்ணீரின் அளவு 59.77 டி.எம்.சி ஆகும்.
மேட்டூர் அணை, 32 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. ரூ. 5 கோடி செலவில்1925 ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1934 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்தஅணை. இதன் நீளம் 5 ஆயிரத்து 300 அடி. உயரம் 124 அடி.
இதில் 93 ஆயிரத்து 50 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். மேட்டூர்அணை மூலம் ஈரோடு, சேலம், தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கரையோரப்பகுதிகளில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி டெல்டாபாசனத்தின் மூலம் பயனடைகிறது.
அணை நிரம்பியது குறித்து காவிரி வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவபிரகாசம்கூறுகையில், அணை கட்டி முடிக்கப்பட்ட இந்த 66 ஆண்டுகளில் 32 வது முறையாகநீர் மட்டம் 120 அடியைத் தாண்டியுள்ளது.
அணை நிரம்பியுள்ளதால் நீண்ட நாட்களுக்கு அணையில் நீரைத் தேக்கி வைக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும்மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி இப்பகுதி வழியே செல்லும் லாரிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் சுப்ரமணியன், பொறியாளர் வசந்தன்மற்றும் சண்முகம் ஆகியோர் அணையை 24 மணிநேரமும் கண்காணித்துவருகிறார்கள் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications