"ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதி
மும்பை:
மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்து கொள்ள மும்பை ப்ரீச்கன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை அட்மிட் செய்யப்பட்டார்.
சில வாரங்களுக்கு முன் திடீரென்று ஏற்பட்ட மூட்டுவலியால் வாஜ்பாய் அவதிப்பட்டு வந்தார். அந்த வலியுடனேயே அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வாஜ்பாய் ஒப்புக் கொண்டார்.
மும்பையில் உள்ள பிரீச்கன்டி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மூட்டு அறுவை சிகிச்சைநிபுணரான சித்தரஞ்சன் ரனாவத் செவ்வாய்க்கிழமை இந்த அறுவை சிகிச்சையை செய்கிறார்.
அறுவை சிகிச்சைக்காக திங்கள்கிழமை காலை மும்பை வந்த வாஜ்பாய், நேராக மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆனார். இதையடுத்து பிரதமரின்அலுவலகமும் மும்பைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
மும்பையில் பிரதமர் இருக்கும்வரை அந்த அலுவலகமும் அங்கே செயல்படும். மருத்துவமனைக்கு அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமரின்அலுவலகம் செயல்படும் என்று பிரதமரின் முதன்மைச் செயலர் பிராஜேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மருத்துவமனை உள்ள பகுதியைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 08,2000
அக்டோபர் 05,2000
அக்டோபர் 03,2000
அக்டோபர் 02,2000
செப்டம்பர் 26,2000
அக்டோபர் 10ல் வாஜ்பாய்க்கு மூட்டு அறுவை சிகிச்சை
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications