சம்பள உயர்வு பிரச்சனை: விஸ்கோஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
சிறுமுகை:
சம்பள உயர்வு குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து விஸ்கோஸ் தொழிற்சாலையின் தொழிலாளர்கள்பாாேராட்டத்தில் இறங்குகின்றனர்.
கோவை மாவட்டம், சிறுகையில் தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3,000தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத் தொழிற்சாலை வெளியேற்றி வந்த கழிவுப்பொருட்களால் பவானி ஆறு மாசு பட்டு வந்தது.
இதையடுத்து இத் தொழிற்சாலை, கழிவுப் பொருட்களை சுத்திகரித்து தான் வெளியேற்ற வேண்டும் எனவும், கடுமையான கழிவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் ஆலைப் பிரிவை மூட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆலையின் அந்தப் பிரிவு மூடப்பட்டது. மேலும், தொழிற்சாலையின் பிற பிரிவுகளில் உருவாகும் கழிவைசுத்திகரிக்க ஒரு சுத்தகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. இதற்கென பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதையடுத்து இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, போனஸ் போன்றவை தடைபட்டன.எனவே கடந்த 97, 98, 99 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்படாத சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும்இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கோவை தொழிலாளர் ஆணையத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 97,98, 99 ம் ஆண்டுகளுக்கு தலா 200 ரூபாய் சம்பள உயர்வும்,2000ம் ஆண்டிற்கு ரூ. 400மும் லாபம் ஈட்டும் சமயத்தில் மாதம் ஒன்றிற்கு ரூ. 100 வீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. சம்பளஉயர்வு தொகை தவணை முறையில் வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே,தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.டி.யு., ஜே.டி.எல்.எப்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்ஈடுபட முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு ரூ. 600 வீதம் முதல் 750 வரை சம்பள உயர்வு வழங்க வேண்டும். அனைத்து சம்பளஉயர்வையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும்.
தொழிற்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தஅமைப்புகள் கோரி வருகின்றன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், உண்ணாவிரதம் ஆகியவை மேற்கொள்ளவும் இந்த அமைப்புகள் தீர்மனம்நிறைவேற்றியுள்ளன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications