புரட்சிக்குப் பின்.. 1 ஆண்டு முடிந்தும் குழப்பத்தில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் நாட்டின் நிலையைப் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் ராணுவத் தளபதி முஷாரப். அதிகாரத்தைக்கைப்பற்றியவுடன், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை சிறையில் அடைத்தார். அவர் மீது கொலை சதி உள்பட பல வழக்குகளைப் போட்டார். இன்னும்சிறையிலேயே இருக்கிறார் நவாஸ்.
முஷாரப் ஆட்சி குறித்து நாடு முழுவதும் அதிருப்தி அதிகரித்துள்ளது. முஷாரப் ஆட்சி குறித்து அவாமி தேசியக் கட்சித் தலைவர் அஸ்பான்யார் வாலி கான் கருத்துத்தெரிவிக்கையில், பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சியே வர வேண்டும். ராணுவ ஆட்சியை யாரும் விரும்பவில்லை என்றார்.
பாகிஸ்தானில் நடக்கும் ராணுவ ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும். அங்கு ஜனநாயக ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவிரும்புவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இரண்டு பெரிய முக்கியத் தலைவர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் பெனாசிர் பூட்டோ. இவர்களில் நவாஸ் சிறையில் இருக்கிறார். பூட்டோ,லண்டனில் இருக்கிறார். இருவர் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனால் அவர்கள் மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுபிரதமர் ஆவார்களா என்பது கேள்விக்குரிய விஷயம்.
நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியை உடைக்க முஷாரப் முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இருப்பினும் சில பொறுப்புகளை முக்கியத்தலைவர்களுக்கு வழங்கினால், கட்சியை உடைப்பது சுலபம் என முஷாரப் நினைக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், வேறு வழியில்லாத முஷாரப், கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான இம்ரான் கான் அல்லது மத தீவிரவாத கட்சிகளானஜமாத் இ இஸ்லாமி அல்லது ஜமாத் உல்மா இ இஸ்லாம் ஆகியவற்றையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முஷராப்புக்கு முதலில் இருந்த ஆதரவு இப்போது இல்லை. அவரால் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் சுயமாக முடிவு எடுக்க முடியுமாஎன்பது சந்தேகமே. குறிப்பாக ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகளைத் தடை செய்வது, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்ற முக்கியமுடிவுகளில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அவரால் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது.
விலைவாசி உயர்வு, பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன் சுமை போன்றவை பொதுமக்களிடையே முஷாரப் ஆட்சிகுறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications