புதிய தூதர்களுக்கு வெற்றி கிடைக்குமா?
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து, நடிகர் ராஜ்குமாரை மீட்டு வர அரசுத் தூதர் கோபாலுடன், மேலும் 3 தூதர்கள் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர் பழ. நெடுமாறன். கோபாலுடன் சென்றுள்ள இந்தப் புதிய தூதர்களுக்கு வெற்றி கிடைக்குமா என்பது இன்னும் ஓரிருதினங்களில் தெரிய வரும்.
புதிதாக சென்றுள்ள மூவர் குறித்த தகவல்கள்.
பழ.நெடுமாறன்: காங்கிரஸ் இயக்கத்தின் தீவிர பற்றுக் கொண்டவரான இவர் மதுரையைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திபடுகொலைச் சம்பவத்தில், தொடர்புடைய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியவர். தற்போதும் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர் மீது பெரும் தாக்குதல் நடந்தது. அப்போது தன்தலையைக் கொடுத்து இந்திராவின் உயிரைக் காப்பாற்றியவர் இவர்.
பின்னாளில், மூப்பனாருக்கும், இவருக்கும் அரசியல்ரீதியாகப் பிரச்சனைகள் வரவே காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழர் பாதுகாப்பு இயக்கங்களுடன் தன்னைஇணைத்துக் கொண்டார்.
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்.
பேராசிரியர் கல்யாணி:
திருநெல்வேலி மாவட்டம் சவுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த இவர் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். முதலில் திண்டிவனம் அரசுக் கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.
பொதுச்சேவைக்காகத் திருமணம் செய்து கொள்ளாத இவர், மனித உரிமை இயக்கத்திற்காக தனது அரசு வேலையை ராஜினாமா செய்தவர்.
விழுப்புரம் பகுதியில் வாழும் பழங்குடியினர் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாக பல போரட்டங்கள் நடத்தி வருகிறார் இவர். இவர் மீது பலவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகுமாறன்:
சுகுமாறன் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழக செயலாளராக இருக்கிறார்.
கொடைக்கானல் டிவி டவர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கைது செய்யப்பட்டவர். இச்சம்பவத்தில் மாறனுக்கும்தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வரும் இவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications