ஜெ. இன்னும் திருந்தவில்லை .. ஆர்க்காடு வீராச்சாமி
சென்னை:
உண்மையை மறைப்பதற்காக தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, மூளை குழம்பி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்ஆற்காடு வீராச்சாமி விமர்சித்துள்ளார்.
டான்சி நிலப் பேரல் ஊழல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துஅதிமுக தொண்டர்கள் சாலை மறியல், பஸ்சுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யும்படிஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்து அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி வெளியிட்ட அறிக்கை:
கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்து விட்டு அறிக்கைகள் வெளியிடுவது ஜெயலலிதாவுக்கு வாடிக்கையான விஷயம். 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைகிடைத்தவுடன் வன்முறையில் ஈடுபட்ட தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மூளைக் குழப்பத்தில் அவசர, அவசரமாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்ஜெயலலிதா. பஸ்களைக் கொளுத்தியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, மதுரையில் பஸ்கள் எரிக்கப்பட்டசம்பவத்திற்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அபாண்டமாகக் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை வன்முறைச் சம்பவத்தில் 8 திமுக வினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜெயலலிதாவோ, இதையெல்லாம் மீறி, மதுரை சம்பவத்தில் தொடர்புடைய யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுகுற்றம்சாட்டியுள்ளார். இப்படி உண்மைகளை மறைத்து, மறைத்து அதற்கான பரிசைப் பெற்றுள்ள ஜெயலலிதா இன்னமும் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லைஎன்பதுதான் உண்மை என்ற தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராச்சாமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications