அமெரிக்க நிறுவனத்துடன் கோவை கே.ஜி. நிறுவனம் ஒப்பந்தம்
கோவை:
அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கோவையில் உள்ள கே.ஜி.இன்பர்மேஷன் சிஸ்டம்நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனில் 5000பேருக்கு வேலை வாய்ப்புஏற்பட்டுள்ளது.
கோவையில் கே.ஜி. இன்பர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில்தற்போது 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் அமெரிக்காவில்உள்ள ஹார்ட்லேன்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்துசெயலாற்றவுள்ளது.
இது குறித்து கே.ஜி. இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர்அசோக் பக்தவத்சலம் மற்றும் மூத்த அதிகாரி ஜேக்கப் ஆர். வில்லியம் ஆகியோர்கூறியதாவது:
கே.ஜி. நிறுவனத்தின் முக்கியப் பணி மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன். அமெரிக்காவில்உள்ள மருத்துவமனைகளுக்கு எங்களது பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதையடுத்து அமெரிக்காவில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனில் ஈடுபட்டுள்ளஹார்ட்லேன்ட் நிறுவனம், கே.ஜி. நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிறுவனம் 4 மில்லியன் டாலர் சொத்துக்களை அமெரிக்காவில் கொண்டுள்ளது.அமெரிக்காவில் ஒகியோ போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குஇந்நிறுவனம், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணியை செய்து வருகிறது.
தற்போது உருவாகியுள்ள ஒப்பந்தப்படி, கே.ஜி. நிறுவனம் 51 சதவீதப் பங்கையும்,ஹார்ட்லேன்ட் 49 சதவீதப் பங்கையும் கொண்டிருக்கும். அடுத்த ஓராண்டிற்குள் இந்தஒப்பந்தம் அமலுக்கு வரும். இதன் மூலம் கோவையைச் சேர்ந்த 5000பேருக்குமெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
200 மில்லியன் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணிகள் இந்த நிறுவனத்திற்குக்கிடைக்கவுள்ளன. இந்தப் பணி ஆண்டுக்கு 15 சதவீத அளவில் வளர்ச்சி பெறும்.
ஹார்ட்லேன்ட் நிறுவனம் ஏற்கனவே சண்டிகர், புதுடில்லி போன்ற இடங்களில் உள்ளநிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தோல்வியடைந்தது. இதையடுத்துதற்போது கோவையில் உள்ள எங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம்மேற்கொண்டுள்ளது. இது வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
நிறுவனத்தின் அடிப்படை வசதிகளைப் பெருக்க 22 மில்லியன் டாலர்கள்செலவிடப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 மில்லியன் டாலராகஉயரும்.
இதேபோல, அமெரிக்கன் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் சங்கத்துடனும் (ஏ.ஏ.எம்.டி)கே.ஜி. நிறுவனம் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சிறப்பானடிரான்ஸ்கிரிப்ஷன் வல்லுநர்களை உருவாக்க முடியும்.
டிரான்ஸ்கிரிப்ஷன் பயிற்சியில் சிறந்து விளங்குவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இத்தகைய சான்றிதழுக்கு இந்த நிறுவனத்திலிருந்து 26 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 13 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியுடன் சாப்ட்வேர் நிறுவனம்ஒன்றையும் கே.ஜி. நிறுவனம் ஏற்படுத்தவுள்ளது.
அமெரிக்காவில் சான்ஜோஸ் மற்றும் டெட்ராய்ட் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனக்கிளைகள் விரிவுபடுத்தப்படும். ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும்கிளைகளை ஏற்படுத்த திட்டம் உள்ளது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications