இலங்கையில் "தொங்கு பாராளுமன்றம்
கொழும்பு:
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ளநிலையில், தொங்கு நாடாளுமன்றம் உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் ஆட்சியைப் பிடிப்பதற்காக சிறிய கட்சிகளைதாஜா செய்யத் துவங்கி விட்டது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.அதேசமயம், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆளுங்கட்சியும் சிறியகட்சிகளை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
முடிவுகள் ஒருபக்கம் வெளியாகிக் கொண்டுள்ள நிலையில், சிறிய கட்சிகளில் உள்ளதங்களுக்கு வேண்டிய தலைவர்களிடம் அதிபர் சந்திரிகாவும், ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் விக்கிரசிங்கேவும் ஆதரவு கோரி பேச்சுவார்த்தையைத் துவக்கி விட்டதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஆளுங்கட்சிக் கூட்டணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மிகவும்நெருக்கமான வகையில் வெற்றியை பெற்று வருகின்றன. இருப்பினும்ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 சீட்டுகளை எந்தக் கூட்டணியும் பெறமுடியாது என்று கருதப்படுகிறது. மெஜாரிட்டி பெற குறைந்தது12 சீட்டுகளாவதுதேவைப்படும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சிறிய, தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகளின் உதவியுடன்தான் எந்தக் கட்சியும்ஆட்சியைமக்க முடியும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழர் கட்சிஒன்றின் தலைவர் கூறுகையில், முன்னணி அரசியல் கட்சியின் முன்னணித் தலைவர்ஒருவர் தன்னிடம் ஆதரவு கேட்டதாகக் கூறினார்.
இருப்பினும் மூன்றாவது பெரிய கட்சியான சிங்கள இனவாத ஜனதா விமுக்தாபெரமுனா கட்சி கூறுகையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தர மாட்டோம் என்றுஅறிவித்துள்ளது. இந்தக் கட்சிக்கு 5 அல்லது 6 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு மொனரகலா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் 3 தொகுகிகளில்சந்திரிகாவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் பெருமளவில் தேர்தல் முறைகேடுகள்நடந்திருப்பதாக தமிழர் கட்சிகள் புகார் கூறியுள்ளன.
சில பகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி,ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்குகோரிக்கை விடுத்துள்ளன. மற்றொரு தமிழ் கட்சியும், ஆளுங்கட்சிக் கூட்டணியில்உள்ள ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே பல தொகுதிகளில் வெற்றி வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகஇருப்பதால் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரி தோல்வியடைந்தபல வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications