சோட்டா ராஜனை ஒப்படைக்கக் கோருகிறது இந்தியா
டெல்லி:
தாதா சோட்டா ராஜனை ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சோட்டாராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதில் எந்தவிதமான தாமதமும் இல்லை. அது குறித்தஆவணங்களை மகாராஷ்டிரா மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.அதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசுக்குஇடையே நல்லுறவு நிலவி வருகிறது. பத்திரிக்கைகளில் வந்தது போல்இவைகளுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை .
அனைைவரும் சோட்டா ராஜனைத் தாய்லாந்திலிருந்து அழைத்து வருவதிலும்,அவனைக் கொல்ல முயன்றவர்களை கண்டுபிடிப்பதிலும் மிக முனைப்புடன்செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் 5-ம் தேதி மும்பை போலீசார் பாங்காக் சென்று சோட்டா ராஜனைவிசாரித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோட்டா ராஜனின் பாஸ்போர்ட் போலியானது என்று தெரிய வந்தால்,எந்த விதமான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி தெரியவில்லை.
சோட்டா ராஜன் மலேசியாவிலிருந்து தாய்லாந்து சென்றிருப்பதால், பாஸ்போர்ட்போலியானது என தெரியவந்தால் அவர் மலேசியாவிற்குத்தான் திரும்பஅனுப்பப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சோட்டா ராஜனின் இந்திய பாஸ்போர்ட் போலியானது எனதெரியவந்துள்ளது. அவருக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்1996-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில்தனது பெயர் விஜய் ராமகிருஷ்ண கடம் என்றும், மன்னார்புரியில் வசிப்பதாகவும் கூறிபாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications