பண்டாரநாயகா உடல் சனிக்கிழமை அடக்கம்
கொழும்பு:
செவ்வாய்க்கிழமை மரணமடைந்த இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் (84) உடல்சனிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தேர்தலில் வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இவரது மரணத்தையொட்டி 3 நாட்கள் அரசுமுறை துக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் கொடிஅரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
கொழுபுவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் ஹோரோகொல்லாவில் உள்ள பண்டாரநாயகாவின் சொந்த வீட்டின்தோட்டத்த்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும். கணவர் சோலோமண் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்குஅருகிலேயே தனது உடலையும் புதைக்க வேண்டும் என ஸ்ரீமாவோ உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது உடலை எரிக்க வேண்டாம், கணவர் சமாதியின் அருகிலேயே புதைத்துவிடுங்கள். நான் இறந்த பின்உடலை காலதாமதம் செய்யாமல் புதைக்க வேண்டும். எனது உடலுக்கு அஞ்சலி செலுத்த மலர்கள் வாங்கவேண்டாம். அந்தப் பணத்தை கண்டியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் மருத்துவனைக்கு வழங்குங்கள். அந்தமருத்துவனை விரைவிலேயே கட்டி முடிக்கப்பட வேண்டும் எனவும் பண்டாரநாயகா தனது உயிலில் கடைசிஆசையாகக் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை வரை பண்டாரநாயகாவின் உடல் அவரது ரோஸ்மியெட் மாளிகையில் வைக்கப்பட்டிக்கும்.பின்னர் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். அங்கிருந்து சனிக்கிழமை ஹோரோகொல்லா எடுத்துச் செல்லப்பட்டுஅன்றைய தினமே புதைக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications