ராஜ்குமாருக்கு பாதுகாப்பு தராதது ஏன்?: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு நீதிமன்றம் கண்டனம்
டல்லி:ராஜ்குமாரை வீரப்பன் கடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தும் அவருக்கு பாதுகாப்புத் தர தவறியதுஏன் என தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வீரப்பன் விடுவிக்கக் கோரும் தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை 4 மணி நேரம் நீடித்தது. நீதிமன்ற அறையே நிரம்பிவழிந்தது. மிகுந்த பரபரப்புடன் காணப்பட்ட இந்த வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் பல கேள்விகளைஎழுப்பினர்.
நீதிபதிகள் கூறுகையில், இரு மாநில அரசுகளும் நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ராஜ்குமாரைகடத்தலாம் என்று தெரிந்தும் இரு அரசுகளும் சும்மா இருந்திருக்கின்றன.
குறிப்பாக கர்நாடக அரசு உண்மையை மறைக்கப் பார்க்கிறது. ராஜ்குமார் விடுவிக்கப்படாவிட்டால் சட்டம்-ஒழங்குபிரச்சனை வரும் என்று சொல்கிறது கர்நாடக அரசு. இது உண்மையல்ல. வீரப்பனின் உண்மையானகோரிக்கைகளை மறைப்பதற்காக கர்நாடகம் இப்படிக் கூறி வருகிறது.
இந்த சினிமா நடிகருக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதுஎந்த அளவுக்கு உண்மை என்பதை கர்நாடக அரசு விளக்க வேண்டும்.
அதே போல வீரப்பனை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடக அரசு என்னென்ன நடவடிக்கைகளைமேற்கொண்டது என்ற முழு விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
வீரப்பனைப் பிடிக்க சிறப்புப் படை அமைத்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை என்றால் என்ன தான் செய்தனஅந்தப் படையும், அரசும்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது கர்நாடக அரசின் வழக்கறிஞர் எழுந்து சில முக்கியமான கோப்புகளை நீதிமன்த்திடம் வழங்கத்தயாராக இருப்பதாகக் கூறினார். அதை திங்கள்கிழமை சமர்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications