எல்ட்சின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
மாஸ்கோ:
ரஷ்ய முன்னாள் பிரதமர் போரிஸ் எல்ட்சின் தன் வாழ்க்கையின் கரடுமுரடான பாதைகளையெல்லாம் கடந்து எப்படி வெற்றி பெற்று அதிபரானார்என்பது குறித்த புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியானது.
எல்ட்சினின், வாழ்க்கை வரலாறு குறித்த "தி பிரசிடென்சியல் மாரத்தான் என்ற அந்தப் புத்தகம் 428 பக்கங்களைக் கொண்டது. தலைநகர்மாஸ்கோவில், இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள ப்ராங்போர்ட் புத்தக கண்காட்சியில், புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பான "மிட்நைட் டையரிஸ் வெளியாகஉள்ளது.
முன்னாள் அதிபர் பல வழிகளில் சோவியத் யூனியன் மக்களால் மறக்க முடியாதவர். சோவியத் யூனியன் பல துண்டுகளாக சிதறுண்டு போக எல்ட்சினே காரண்.செச்னியாவில் இரண்டு முறை உள்நாட்டுக் கலகத்தை அடக்க முயன்று தோல்வி கண்டார். பொருளாதாரம் படு வீழ்ச்சியைக் கண்டது எல்ட்சின் காலத்தில்.
இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்த நேரத்தில் பதவியிலிருந்து விலகி விலாடிமிர் புடினை அதிபராக நியமித்தார் எல்ட்சின்.












Click it and Unblock the Notifications