ஜெயா முழுப் பூசணியை சோற்றில் மறைக்கிறார்- திமுக
சென்னை:
டான்சி வழக்கில் அடிப்படை ஆதாரமில்லை என்று சொல்லி தன்னை நீதிமன்றம் முன்பு விடுவித்ததாக ஜெயலலிதா கூறுவதுஉண்மையல்ல என்று திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அறிக்கைக்கு பதலிளித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறிய பிறகு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ள ஜெயலலிதாவிற்குஉரிமை உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், முழு பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல டான்சி வழக்கில் உயர் நீதிமன்றம் அடிப்படை ஆதாரமே இல்லைஎன்று சொல்லி ஜெயலலிதாவை விடுவித்து விட்டதாகவும், தற்போது தனி நீதிமன்றம் வேறுவிதமான தீர்ப்பை தனக்கு அளித்துவிட்டதாகவும் தனக்கு அளித்து விட்டதாகவும் ஜெயலலிதா அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கிலே பூர்வாங்க ஆதாரங்கள் இல்லை என்றும் முறைப்படி டெண்டர் போடப்பட்டுத்தான் அந்த நிலம்விற்கப்பட்டதாகவும் கூறி அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஒரு மனுவை, தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாதாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி இந்த வழக்கிலே பூர்வாங்க ஆாரங்கள் இருக்கிறதென்று கூறி ஜெயலலிதாவை வழக்கிலிருந்துவிடுவிக்க முடியாதென்று மறுத்து விட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தான் உயர் நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி தங்கராஜ், ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து கடந்த ஜனவரி 13ம் தேதி தீர்ப்புக் கூறினார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அதை விசாரித்து, ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்திலே தாக்கல் செய்த மனுவை அவர்களே திரும்பப் பெற்றுக் கொள்கிறார்களா அல்லது அந்த மேல்முறையீட்டின் மீதுஉச்ச நீதிமன்றமே ஆணை பிறப்பிக்கலாமா என்று கேட்டது.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் அவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்தமனுவை திரும்பப் பெற்றனர். தொடர்ந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், கடந்த ஜனவரி 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திலே அளிக்கப்பட்ட தீர்ப்பு அப்படியே அழிக்கப்பட்டதாக நாங்கள் அறிவிக்கிறோம்.
தனி நீதிமன்றம் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவிலே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டுமென்றுஆணையிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றமே கூறி விட்டது.
இந்த விவரத்தையெல்லாம் மறைத்து விட்டோ அல்லது மற்றவர்களுக்கு தெரியாது என்றோ கருதிக் கொண்டு ஜெயலலிதாவும்மற்றும் ஒரு சில தலைவர்களும் ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்து விட்டதாகஉண்மைக்கு மாறாகக் கூறுகிறார்கள் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications