தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி .. புதிய நீதிக்கட்சி
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைக்க புதிய நீதிக்கட்சி அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கட்சி நிறுவனர் மற்றும் முன்னாள் எம்.பி.ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், டான்சி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 3 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பஸ் எரிப்பு, சாலை மறியலில் ஈடுபட்ட பல தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா தவறு செய்ததற்கு அவரது தொண்டர்கள் பலர் சிறைக்குச் சென்றுள்ளனர். தவறான தலைமையால்இன்று அதிமுக வுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை, மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பிறஅரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியது. இதை எதிர்த்துகருணாநிதி குரல் கொடுக்கவில்லை. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களைப் பெரிதும்பாதித்துள்ளது. இந்த மக்கள் விரோதக் கொள்கையால் திமுக அரசு மீது, மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆதரவாளர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்தால் அதை நாங்கள்மகிழ்ச்சியுடன் வரவேற்போம். நாங்கள் அதிமுக வுடனோ அல்லது திமுக வுடனோ கூட்டு சேர மாட்டோம்.
மத்திய அரசின் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் வரும் அக்டோபர் 14 ம் தேதி 110தாலுக்காக்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார் சண்முகம்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications