காஷ்மீரில் கடத்தப்பட்ட 3 போலீஸார் பிணமாக மீட்பு
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 3 ரிசர்வ்போலீஸ்காரர்களின் உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஜம்மு போலீஸ் ஐ.ஜி. ஆர்.வி.ராஜூ கூறியதாவது:
சூரன்கோட் பகுதியில் வசித்து வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் வீட்டில் தலைமைக் காவலர் அப்துல்மஜித், கான்ஸ்டபிள்கள் குலாம் முகமது, அப்துல் ரஷித் ஆகியோர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று அவர்கள் மூன்று பேரையும் கடத்திக் கொண்டு சென்றது.
ஆனால் அவர்கள் யாரால் எப்படிக் கடத்தப்பட்டனர் என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே வியாழக்கிழமைபூஞ்ச் மாவட்டம் சராரி காட்டில் இவர்களது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களது உடல்களை எடுத்துவருவதற்காக தனிப்போலீஸ் படையினர் பூஞ்ச் மாவட்டம் சென்றுள்ளனர் என்றார் ராஜூ.
இதற்கிடையே சூரன்கோட்டே பகுதியில் புதன்கிழமை இரவு இரண்டு பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் ரபிபாத் பகுதியில் உள்ள முசாபர் அகமது கான் என்பவரின் வீட்டில் அடையாளம்தெரியாத, துப்பாக்கிய ஏந்தியவர்கள் புகுந்து சராமரியாகச் சுட்டதில் முசாபர், அவரது மனைவி மற்றும் மகன்ஆகியோர் இறந்தனர்.
ஸ்ரீநகர்- பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.இதில் அதில் பயணம் செய்த இரண்டு பாதுகாவலர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை காலைநடந்தது.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications