ஒரு மலைப்பகுதி சிரித்தால்...
மலர்களில் குறிஞ்சி மலர் அபூர்வமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இந்த மலர் பூத்துக் குலுங்கும்.
இதிலும் அரியது மினியேச்சர் வரை குறிஞ்சிப் பூ. இந்த அரியவகை குறிஞ்சிப்பூ இப்போது நீலகிரியில் பூத்துக்குலுங்குகிறது. இதனால் நீலகிரி மலையே தனிக் கவர்ச்சி பெற்றுள்ளது.
சங்க இலக்கியங்களில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்பட்டது. மலைகளில் இந்தமலர்கள் அபூர்வமாக மலர்வதால், இந்த மலர்களின் பெயரிலேயே மலைப் பகுதிகளையும் அழைத்து தமிழ்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர், மிதமான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் மலர்வதுண்டு.குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கும்போது மலைப் பகுதிகள் கவர்ச்சிஅடைகின்றன.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இந்தப் பூக்களைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர்.
குறிஞ்சிப் பூவில் 29 வகைகள் உள்ளன. ஒரு வகை மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வதைப் போல 8, 6,3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சில வகை குறிஞ்சிப் பூக்கள் மலர்வதுண்டு என்கின்றனர் தாவரவியல்ஆராய்ச்சியாளர்கள்.
குறிஞ்சிப் பூக்களிலும் வண்ணப் பூக்களும் உண்டு.
நீலகிரி மலையில் மலரும் இரண்டு வகை குறிஞ்சிப் பூக்களில் சிறிய வகைக் குறிஞ்சிப் பூக்களை "மினியேச்சர்குறிஞ்சி என அழைக்கின்றனர். இவற்றை இந்தப் பகுதி மக்கள் சோழா குறிஞ்சி மற்றும் கட்டசொப்பு எனவும்அழைக்கின்றனர்.
நீலகிரி மலைப் பகுதிகளில் இந்த குறிஞ்சிப் பூக்கள் இந்த ஆண்டு சின்னக் குன்னூர் என்ற இடத்தில் மலர்ந்துள்ளன.இவை பாசி படிந்த இடங்களில் அதிக அளவு மலரத் தொடங்கியுள்ளன.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த குறிஞ்சிப் பூக்கள் மலர ஏதுவான தட்ப வெப்பநிலை அமையும்.
ஆனால் செப்டம்பர் மாதத்திலேயே குறிஞ்சி பூப்பதற்கு ஏற்ற வெப்பநிலை நிலவ ஆரம்பித்ததால் மலர்கள்இப்போதே பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டன.
டிசம்பர் மாதம் வருகையில் இந்த மலைப் பகுதிகள் முழுவதுமே குறிஞ்சி பூக்க ஆரம்பித்துவிடும் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.
தற்போது பூத்துக் குலுங்கும் மினியேச்சர் வகை குறிஞ்சி இலையின் நீளம் 3 செ.மீயாகவும் அகலம் 1.5செ.மீயாகவும் உள்ளது. எதிர் எதிர் அடுக்ககாக இருக்கும் இம்மலர்களால் நீலகிரி மலையே சிரிப்பது போல்உள்ளது.
மலைகளில் நீரோடைகள் நிறைந்த இடங்களில் இந்த மலர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால்இப்பகுதியே வயலெட் கலருக்கு மாறி இருக்கிறது.
இந்த மினயேச்சர் ரக குறிஞ்சி ப் பூக்கள் கடந்த 1908ம் ஆண்டில் தான் மலர்ந்தன. அதற்குப் பின் பிற வகைகுறிஞ்சிப் பூக்கள் பூத்தாலும் இந்த மலர்கள் பூக்கவில்லை. இப்போது இந்த அரிய மலர்கள் மீண்டும் இந்த மலைப்பகுதியை எட்டிப் பார்த்திருக்கின்றன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications