நியூஸ் வீக் ஆசிரியராக இளம் இந்தியர் நியமனம்
வாஷிங்டன்:
சர்வதேச ஆங்கில வார இதழான நியூஸ் வீக் செய்தி ஆசிரியராக இந்தியரான பரீத் சகாரியா (வயது 35)நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக இவர் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பாரின் அபையர்ஸ் இதழின் நிர்வாகஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் நியூஸ் வீக் இதழுக்கும் தொடர்ந்து எழுதி வந்தார்.
உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கரைத்துக் குடித்த அதி புத்திசாலி இவர் என்கிறார் இப்போது அதிபர்தேர்தலில் போட்டியிடும் ஜார்ஜ் புஷ்ஷின் ஆலோசகரான கோண்டோலெஸ்சா ரெய்ஸ்.
அவர் விலகிச் செல்வது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்கிறார் பாரின் அபையர்ஸ் இதழின் நிறுவனம். 1993ம்ஆண்டில் 28 வயதிலேயே பாரின் அபையர்ஸ் இதழின் ஆசிரியரானவர் என்ற பெருமையும் பரீதுக்கு உண்டு.
1997ம் ஆண்டில் இவர் அந்தப் பத்திரிக்கையில் எழுதிய தாராளயமயமான ஜனநாயகயங்கள் என்ற கட்டுரைக்குதேசிய விருதும் கிடைத்தது.
இவரது தந்தை மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். இந்திரா காந்தியின்நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கியவர். இவரது தந்தை பாத்திமா சகாரியா டைம்ஸ் ஆப் இந்தியாவின்,சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்தவர்.
பரீத் சகாரியா ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பும் அரசியல் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டமும்பெற்றவர்.
கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் பரீதை மிகவும் பாராட்டியிருந்தது.இந்தியாவைச் சேர்ந்த இவர் ஒரு நாள் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளரானாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று இவரைப் பற்றி அந்தக் கட்டுரையில் வர்ணித்திருந்தது.
நியூயார்க்கைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான பெளலா த்ரோக் மோர்ட்டனை திருமணம் செய்துள்ளசகாரியாவுக்கு 15 மாத கைக் குழந்தை உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications