ராஜ்குமார் விவகாரத்தில் தலையிட மனித உரிமை கமிஷன் மறுப்பு
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில், நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மனித உரிமைக் கமிஷன் தலைவர் ஜே.எஸ்.வர்மாவியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கர்நாடக கொத்தடிமைகள் விவகாரம் தொடர்பான இரண்டு நாட்கள் கருத்தரங்கில் தேசிய மனித உரிமைக் கமிஷன் தலைவர் ஜே.எஸ்.வர்மா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. தடா கைதிகளைவிடுவித்தால்தான், ராஜ்குமாரை விடுவிப்பேன் என்று வீரப்பன் உறுதியாகக் கூறி வருகிறார்.
இந்த விஷயத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் சரியான நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றன. ராஜ்குமார் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்என்பதற்காக மனித உரிமைக் கமிஷன் இவ்விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
மைசூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று 1999 ம் ஆண்டு மனித உரிமைக் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்றார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
