அரசியல் விமர்சனம்
மற்றவர்கள் விஷயத்தில் அப்பீல் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதால் மட்டும் தகுதி இழப்பு தள்ளி வைக்கப்பட்டு விடாது ; தண்டனைஅளிக்கிற தீர்ப்புக்கு, மேல் நீதிமன்றம் தடை விதித்தால்தான், தகுதி இழப்பு தள்ளி வைக்கப்படும்.
இதில் இரண்டாவது கருத்துதான் சரியானது என்று நான் நினைக்கிறேன். முதல் கருத்தை ஒட்டியே, தேர்தல் கமிஷனரின் கருத்தும் அமைத்திருக்கிறது ; பல சட்டவல்லுனர்களும் கூட, அதையே ஆமோதிக்கிறார்கள். நீதிமன்றங்கள் என்ன கூறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தத் தகுதி இழப்பு என்பது அரசியல் விஷயம். ஜெயலலிதா இப்போது தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பை அடைந்திருக்கிறார். அது தொடர்ந்தால்,அதன் காரணமாக வர இருக்கின்ற சட்டசபைத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியாமற் போகும். அதனால் ஏற்படுகிற அரசியல் விளைவுகள்என்னவாக இருக்கும் என்பதை வரும் இதழ்களில் பார்ப்போம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஜெயலலிதா இப்படி தண்டனை பெற்றிருப்பது. தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.
ஆனால் இது தனிப்பட்ட கோணத்தில் இருந்து அணுகப்பட வேண்டிய விஷயம் அல்ல. இது பொதுப்பிரச்னை. அப்படிப் பார்க்கும் போது, சட்டத்தின் முன்எல்லோரும் சமமே என்ற தத்துவம் நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், சட்டத்தின் மாட்சிமை நிலை நிறுத்தப்பட்டிருப்பதாலும், இந்த மாதிரி தீர்ப்புகள் இறுதியில்நாட்டுக்கு நல்லதையே செய்யும் என்பதைத்தான் நாம் அனைவரும் உணர வேண்டும்.
ஊழல் செய்த பலர் தப்பி விடுகிறார்கள் என்பதற்காக - முறைகேடுகளைச் செய்த பல அரசியல்வாதிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லைஎன்பதற்காக - சிக்கிக் கொள்கிற அரசியல்வாதிகளும் தப்பிக்கத்தான் வேண்டும் என்று நினைப்பது நேர்மையான அரசியலுக்கு வழி வகுக்காது.
இப்படி ஒரு சிலர் தண்டனை பெற்று விடுவதால் மட்டும் அரசியலில் நேர்மை தோன்றிவிடப் போகிறதா? என்று கேட்கலாம். உடனடியாக அப்படிப்பட்ட அதிசயத்தக்க மாற்றம் ஏற்பட்டு விடப் போவதில்லை என்றாலும், அந்த திசையை நோக்கி பயணம் செய்கிற வாய்ப்பையாவது இந்த மாதிரிதீர்ப்புகள் உருவாகும் என்று நிச்சயமாக நம்பலாம்.
முறைகேடாக நடந்து கொள்கிற அரசியல்வாதிகளும், ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் இம் மாதிரி தீரப்புகளின் காரணமாக, கொஞ்சமாவது தயக்கம்காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
செய்கிற தவறை, சிக்கிக் கொள்ளாத வகையில் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எல்லாம் நினைப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட,இந்த மாதிரி தீர்ப்புகளினால் ஒரு நல்ல விளைவு ஏற்படும். ஏனென்றால் ஊழலும், முறைகேடும் தண்டனைக்குள்ளாகும் போது, அவற்றுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கு ஓர் அச்ச உணர்வு நிச்சயமாகத் தோன்றும்.
ஊழல் செய்கிற அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கவும், அவர்கள் தவறே செய்யவில்லை என்று மக்களிடையே வாதிடவும் தலைவர்களும் முன்வருவார்கள். பெரும் கூட்டங்களும் தாளம் போடும். ஆனால் அதிகாரிகள் விஷயத்தில் இம் மாதிரி ஆதரவு கிடைக்காது. அவர்கள் அனாதைகளாகநின்றுதான் வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆகையால் இம்மாதிரி வழக்குகளில் வரும் கடும் தீர்ப்புகள், எதிர்காலத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு துணை போகாமல் அதிகாரிகளை தடுத்துநிறுத்தும் வாய்ப்பு நிறையவே உண்டு.
அப்படி ஊழலுக்குத் துணை போக அதிகாரிகள் மறுக்கிற நிலை வந்தால், ஊழல் பெருமளவு குறையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகையால், இம்மாதிரி வழக்குகளில் சட்டத்தின் மாட்சிமை நிலை நிறுத்தப்படும் போது, அது வரவேற்கத்தக்கதே.
ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக ஓர் ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது ;அது தவிர நீதிமன்றங்கள் இந்த வழக்குகள் விசாரணைக்குரியஆதாரங்கள் கொண்டவை என்றும் கூறியுள்ளன ; இப்போது இந்த தீர்ப்பும் வந்திருக்கிறது.
இனியும் பொய் வழக்குகள் போட்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தரப்பினர் வாதிட்டால், அது சிறிதும் எடுபடாது. அவர் மட்டுமல்ல,அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளும் இதை உணர வேண்டும்.
நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையைஎதிர்நோக்கி இருக்கிறார் ; முன்னாள் முதல்வர் ஒருவர்,தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.
சட்டத்தின் இந்தப் பயணம் தொடர்ந்தால், தவறு செய்கிற அரசியல்வாதிகள் தப்பிப்பது நிச்சயம் என்பது, முன்னாள் கதையாக முடியும். அது இந்நாளுக்குநல்லது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications