மிக் விமானம் நொறுங்கியது: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இந்திய விமானப் படையின் மிக் -21 ரக போர்விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானியும், தரையில் இருந்த ஒருபெண்ணும் உயிரிழந்தனர்.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.திங்கசாரி என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. 18 வீடுகள் இந்தவிபத்தில் இடிந்து விழுந்தன.
விபத்தில் விமானியான மோகன் குமார் மற்றும் 18 வயதுப் பெண் சோட்டுகன்வர்ஆகியோர் இறந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications