அரசின் குழப்பத்தால் 300 கோடி கடன் ரத்து .. த.மா.கா. புகார்
சென்னை:
பாசன சீரமைப்புப் பணியைக் கான்ட்ராக்டர்களிடம் தான் ஒப்படைப்போம் என்றுபொதுப்பணித் துறை பிடிவாதம் பிடித்த காரணத்தால் ரூ.300 கோடி கடனுதவி வழங்கநபார்டு வங்கி மறுத்து விட்டது என்று தமிழக அரசு மீது சட்டசபை எதிர்க் கட்சித்தலைவரும் த.மா.கா.முன்னணித் தலைவருமான சோ.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சோ.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
விவசாய வளர்ச்சிக்கு நதியுதவி செய்யும் நபார்டு வங்கி, தமிழ்நாட்டில் ஏரி,குளங்களை சீரமைக்க திட்டம் தீட்டியது.
இத்திட்டப் பணிகளை விவசாயிகளுடைய குழுக்கள் மூலம் தான் செய்ய வேண்டும்என்று நபார்டு வங்கி நிபந்தனை விதித்துள்ளது. அந்த நிபந்தனையை ஏற்றுமுதல்வரும், பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகனும் வாக்குறுதிஅளித்ததன்பேரில் கடன் உதவி அளிக்க நபார்டு வங்கி முன் வந்தது.
ஆனால், தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டு பாசன சீரமைப்பு பணியைக்கான்ட்ராக்டர்களிடம் தான் ஒப்படைப்போம் என்று பொதுப்பணித் துறை பிடிவாதம்பிடிக்கிறது. இதனால் நபார்டு வங்கி கடன் வழங்க மறுத்து விட்டது.
விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாசன சீரமைப்பு பணிகளைகான்ட்ராக்டர்களிடம் ஒப்படைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயபணிகளுக்கு கடனும், உதவியும் வழங்கும் நபார்டு வங்கியின் குறிக்கோள்களில் உரியமாறுதல்கள் செய்ய காரணமாக இருந்தவர் ப.சிதம்பரம் என்பதை இத்தருணத்தில்நினைவில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய கட்சிக்காரர்கள் பயன் பெறுவதற்காக அரசு நிர்வாகம் வளைந்துகொடுக்கிறது என்ற நிலவரத்தை நிரூபிக்கிற வகையில் நபார்டு வங்கி விவகாரம்எழுந்துள்ளது என்று கூறியுள்ளார் சோ.பா.












Click it and Unblock the Notifications