வர்த்தககமயமாகும் பிராட்மன் பெயர்: தடுக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

அடிலெய்டு:

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சர் டொனால்டு பிராட்மனின் பெயரை வர்த்தகரீதியில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கைமேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையைபிராட்மன் வரவேற்றுள்ளதாக பிராட்மன் அறக்கட்டளைத் தலைவர் ரிச்சர்டு முல்வானிதெரிவித்தார்.

92 வயதான பிராட்மன் ஆஸ்திரேலிய அணிக்காக பல டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது டெஸ்ட் சராசரி 99.94 ஆகும். இவ்வளவுபெரிய சாதனையைப் புரிந்து, கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகவும் விளங்கிவரும் பிராட்மனின் பெயர் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாதுஎன்பதில் ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், பிராட்மனின் பெயருக்கு வர்த்தக ரீதியிலும் எந்த விதமான களங்கமும்ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிய சட்ட ரீதியான நடவடிக்கையைஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளது.

சமீப காலமாக வர்த்தக ரீதியில் பிராட்மனின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள பலநிறுவனங்கள் முன் வந்தன. அது தொடர்பாக அரசுக்கு அவை விண்ணப்பிக்கவும்செய்தன.

பிராட்மனின் பெயருக்கு உள்ள பாபுலாரிட்டியைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கஅந் நிறுவனங்கள் முடிவு செய்து அத்தகைய முயற்சியை மேற்கொண்டன. புதிதாகத்திறக்கப்படவுள்ள செக்ஸ் தொடர்பான பொருட்கள் விற்கும் கடைக்கு பிராட்மன்பெயரை வைக்க ஒரு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

வர்த்தக நிறுவனங்களின் மேற்கண்ட முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றுபிராட்மனின் மகன் ஜான், ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்டுக்கு கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து புதிய சட்ட ரீதியான நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசுமேற்கொண்டுள்ளது.

இதையடுத்து பிராட்மனின் புகழுக்குக்குக் களங்கமோ, அரசு பெயருக்குஅவமரியாதையோ ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையானநிபந்தனைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

பதிவுக்கு வரும் எந்த ஒரு நிறுவனமும், பிராட்மனின் பெயரைக் கொண்டிருந்தால் அந்நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டாம் என்று நாட்டில் உள்ள அனைத்துமாநகராட்சிகளுக்கும் பிரதமர் ஹோவார்டு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+