ஜெ. வீட்டு நாய்கள் குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பற்றிசிறப்பு நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட சிலர்மீது முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை நடந்த குறுக்கு விசாரணையில், ஜெயலலிதா வீட்டில் வேலை செய்துவந்த பொதுத்துறை சார்புச் செயலர் ஜெயராமன் சாட்சியம் அளித்தார். அவரிடம்ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஜெயராமன் அளித்த சாட்சியம்:

எனது வீட்டில் நாய்கள் வளர்க்கவில்லை. நான் பணி செய்த ஜெயலலிதா வீட்டில்நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு பாண்டிபஜாரில் உள்ள கடையில்இருந்து தினமும் ஆட்டிறைச்சி வரும்.

அது எந்தக் கடை, கடையின் பெயர் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்சியிடமிருந்து லைசென்ஸ்பெறவேண்டும் என்பதோ, லைசென்ஸ் இல்லாத நாய்களை மாநகராட்சி பிடித்துச்சென்றுவிடும் என்பதோ எனக்குத் தெரியாது என்றார் ஜெயராமன்.

அதற்கு, உங்களுக்குப் பொது அறிவு இருக்கிறதாக நினைத்து சாட்சியம் அளிக்குமாறுநீதிபதி உங்களை அழைத்துள்ளார். ஆனால், உங்களுக்கு ஒரு அறிவும் இல்லை என்றுவழக்கறிஞர் ஜோதி கூறினார்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். சாட்சியை ஜோதிமரியாதை இல்லாமல் நடத்துவதாக அவர்கள் கூறினர்.

அதற்கு ஜோதி, நான் சாட்சியை மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. நாலெட்ஜ்இல்லை என்பதைத்தான் ஒரு அறிவும் இல்லை என்று கூறினேன் என்றார் ஜோதி.

மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இப்படி கடுமையாக நடந்துகொண்டால்என்னால் கேள்வி கேட்க முடியாது என்றும் ஜோதி கூறினார்.

அதற்கு, சட்ட விதிமுறைகள் குறித்து சாட்சியிடம் கேள்வி கேட்க வேண்டாம். உங்கள்வாதத்தில் அதை வைத்துக் கொள்ளுங்கள் என்று நீதிபதி கூறினார்.

அதன்பிறகு பேசிய ஜோதி, நான் வேறு சில வழக்குகளில் ஆஜராக வேண்டியுள்ளது.என்னுடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு குறுக்கு விசாரணையை வேறு ஒருநாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜோதி கேட்டுக் கொண்டார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறுக்குவிசாரணையை ஒத்திவைத்தால் சாட்சியத்தை அவர்கள் கலைத்து விடுவார்கள் என்றஅவர்கள் கூறினர்.

2 ஆண்டுகளில் செய்யாததையா 2 நாளில் செய்துவிடுவோம். இப்படியெல்லாம்கூறினால் வழக்கிலிருந்து விலகிவிடுவேன். அரசு தரப்பில் மூன்று வழக்கறிஞர்களும்பேசுகிறார்கள். மூத்த வழக்கறிஞர் சோமசுந்தரம் மட்டும் பேசினால் போது என்றுஅப்போது ஜோதி கூறினார்.

ஜெ. வீட்டில் வேலை செய்தது கெளரவக் குறைவு அல்ல:

முன்னதாக ஜெயராமன் அளித்த சாட்சியத்தில், ஜெயலலிதா வீட்டில் வேலை செய்ததைகெளரவக் குறைவாகக் கருதவில்லை என்று கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் அளித்த சாட்சியம்:

1993-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.அதன்பிறகு, ஜெயலலிதா வீட்டுப் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்காக ஐ.ஏ.எஸ்.அதிகாரி கருப்பண்ணன் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார்.

1993, ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 1996, அக்டோபர் 12-ம் தேதி வரை நான்ஜெயலலிதா வீட்டில் பணியாற்றினேன். ஜெயலலிதா வீட்டில் நடைபெறும் அனைத்துப்பணிகளையும் கவனித்துக் கொள்வதுதான் எனது வேலை.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், முதல்வர் பதவியை இழந்த பிறகு 6 மாதம்வரையிலும் அங்கு பணியாற்றினேன். ஜெயலலிதா வீட்டின் வேலை செய்ததை நான்கெளரவக் குறைச்சலாகக் கருதவில்லை.

ஜெயலலிதா வீட்டில் வேலை பார்ப்பது கெளரவமானது என்று நினைத்து அங்கு நான்வேலைக்குச் சென்றேன். ஜெயலலிதா வீட்டில் சசிகலாவும் இருந்தார். ஜெயலலிதாவைஅவர் கவனித்துக் கொள்வார். வீட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தரவுகளை மட்டும்சசிகலா பிறப்பிப்பார் என்றார் ஜெயராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+