தூதுக்குழு பேச்சைத் துவக்கியது .. கர்நாடக அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனிடமிருந்து சமிக்ஞை கிடைத்து அரசு தூதுக்குழுவினர் காட்டுக்குள்சென்றுள்ளனர். அவர்கள் விரைவில் ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் என கர்நாடகமாநில போலீஸ் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனுடன் தூதுழுவினர்தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தவார்களா, குழுக்களாக பேச்சு வார்த்தைநடத்துவார்களா என தெரியாது. எப்படி பேச்சு நடத்தினாலும் ராஜ்குமார் மீட்கப்படவேண்டும் அதுதான் முக்கியம்.

ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக தமிழக அரசுடன் கர்நாடக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவல் தான்இறுதிகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமையன்று நடக்கிறது என்பது.

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்வது தொடர்பானதகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகவல் கிடைத்ததும் நீதிபதியின் வீட்டுக்கோஅல்லது கோர்ட்டுக்கோ திங்கள்கிழமை அனுப்புவோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தமிழக முதல்வரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ராஜ்குமார் வழக்கு தொடர்பான வழக்கு 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரண்ைககுவந்தபோது வரும் 17-ம் தேதிக்குள் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக அரசின் பதில் மனு தாக்கல் பற்றியும்,ராஜ்குமார் மீட்புபற்ரியும் கிருஷ்ணா தமிழக முதல்வருடன் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசினார்.அப்போது தூதர்கள் காட்டுக்குள் சென்றுள்ளது பற்றி இரு முதல்வர்களும்விவாதித்தனர் என கர்நாடக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+