இந்தியாவோடு இணைக்க முயற்சிக்கிறார் .. வங்கதேச பிரதமர் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

வங்கதேசத்தை இந்தியாவோடு இணைக்க பிரதமர் ஷேக் ஹசினா, முயற்சிப்பதாகமுன்னாள் வங்க தேச பிரதமரும், முக்கிய எதிர்க் கட்சியான பங்களாதேஷ் தேசியக்கட்சித் தலைவருமான கலிதா ஜியா குற்றம் சாட்டியிருக்கிறார்.

தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

1970-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் விடுதலைப் போரில் பங்கேடுத்துக் கொண்டதேநம் நாட்டை பாகிஸ்தானிடம் மீண்டும் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.ஆனால் ஆளும் கட்சியின் செயல்களோ வங்கதேசத்தை இந்தியாவிற்கு கொடுத்துவிடுவது போல உள்ளது.

நாம் போரில் பங்கெடுத்துக் கொண்டது நமது தாய் நாட்டை சுதந்திரமாகவும்,யாரையும் சார்ந்திருக்காமல் இல்லாத நாடாகவும் மாற்றத்தான் என்பதை அவாமி லீக்கட்சி மறந்து விட்டதாகத் தெரிகிறது.

ஹசினா அடுத்த தேர்தலிலும் தனது கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனக்கூறியுள்ளார். எனவே அத்தேர்தலில் முறைகேடுகள் நடக்கலாம் என்றுஎதிர்பார்க்கலாம். அதனால் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல்தடுக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்

கலீதா, 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை பிரதமராக இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+