வாஜ்பாய் ஆட்சி சூப்பர் .. கருத்துக்கணிப்பில் 44 சதவீத ஆதரவு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று 44 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளது.
பல கட்சிகளை உள்ளடக்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி,தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக வாஜ்பாய் பதவியேற்று ஓராண்டுநிறைவடைந்துள்ளது.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடு, பிரதமராக வாஜ்பாயிசெயல்படும் விதம் பற்றி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த ஹிந்துஸ்தான் டைம்ஸ்என்ற பத்திரிக்கை முடிவு செய்தது.
அதன்படி டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 பெரு நகரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 18 முதல் 50 வயது வரையுள்ள சுமார் 800 பேரிடம் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், வாஜ்பாயிக்கும்சற்று தெம்பு அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டாக பிரதமராக வாஜ்பாயின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 44சதவீதம் பேரும், மிக நன்றாக இருப்பதாக 25 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாடுபரவாயில்லை என்று 39 சதவீதம் பேரும், 37 சதவீதம் பேர் நன்றாக இருக்கிறதுஎன்றும், மிக நன்றாக இருக்கிறது என்று 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாளையே தேர்தல் வந்தால் பாஜகவுக்குத்தான் எங்கள் வாக்கு என்று 51 சதவீதம்பேரும், 20 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 19சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாயிக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்க அத்வானிதான் சரியான நபர் என்று 45சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு,பாதுகாப்பத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் சிலர் தங்களதுஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
3-வது முறையாக பதவியேற்றுள்ள வாஜ்பாயிக்கு, இந்த சமீபத்திய கருத்துக் கணிப்புமுடிவுகள் சற்று நிம்மதியையும், தெம்பையும் அளித்துள்ளன என்றால் அதுமிகையில்லை.
முதன் முதலாக 1996-ம் ஆண்டு அறுதிப்பெரும்பான்மை வெற்றி இல்லாவிட்டாலும்வாஜ்பாய் ஆட்சி அமைத்தார். ஆனால், 13 நாட்களில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு 1998-ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் வாஜ்பாய் இரண்டாவதுமுறையாக ஆட்சி அமைத்தார். ஆனால், 13 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிதனது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அந்த ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
இப்போது அறுதிப் பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகள்மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்வாஜ்பாய். கடந்த வெள்ளிக்கிழமையுடன் வாஜ்பாய் ஆட்சி அமைத்து ஓராண்டுமுடிவடைந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications