ஜப்பான் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றது பயஸ்- பூபதி ஜோடி
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பட்டத்தை இந்தியாவின்லியான்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி வென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-4, 6-7, 6-3 என்றசெட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் மற்றும் அமெரிக்காவின் ஜெஃப்தராங்கோ ஜோடியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டம் 2 மணி 15 நிமிடங்கள் நடந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஜோடி வென்றுள்ள பெரிய பட்டம் இதுவாகும்.கடந்த ஆண்டு 2 கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றதுமட்டுமல்லாமல் மேலும் 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் இந்தியஜோடி விளையாடியது.
சிறப்பான ஆட்டத்தினால், உலகின் முதல் நிலை இரட்டையர் ஜோடி என்றபெருமையை லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் பெற்றனர். ஆனால், அதன்பிறகுகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வேறுநபருடன் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
இந் நிலையில், மீண்டும் அவர்களை ஜோடி சேர்ந்து விளையாட வைக்க பலர்முயற்சிகளை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த ஆண்டிலிருந்து இருவரும் சேர்ந்துவிளையாடுவது என்று முடிவு செய்தனர். சமீபத்தில் நடந்த சிட்னி ஒலிம்பிக்போட்டியிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், இரண்டாவது சுற்றிலேயேதோற்றுவிட்டனர்.
இப்போது ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றுதங்களது திறமையை இந்திய ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஜப்பான் ஓபன்டென்னிஸில் இந்திய ஜோடி தொடர்ந்து 5-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 250 புள்ளிகள் இந்திய ஜோடிக்குக் கிடைத்தது. மேலும், மீண்டும்இரட்டையர் டென்னிஸ் பிரிவில் முதல் 50 இடங்களில் ஒரு இடத்தைப் பெறும்நிலைக்கு இந்திய ஜோடி உயர்ந்துள்ளது.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்ற இந்திய ஜோடிக்குப் பரிசுத்தொகையாக ரூ.20 லட்சம் கிடைத்தது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications