உஷார் நிலையில் கர்நாடக போலீஸ்
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30க்கு மேல் எப்போதுவேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்ற புதிய சூழ்நிலை எழுந்துள்ளதால்,கர்நாடகத்தில் ராஜ்குமார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் கர்நாடக போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் முடிவுக்க வரும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.காட்டுக்குள்ளிருந்து நெடுமாறன் தனது அலுவலகத்திற்கு அனுப்பிய செய்தியில்ராஜ்குமார் விடுதலை பிரகாசமடைந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
எனவே ராஜ்குமார் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இரு மாநிலங்களிலும்எழுந்து விட்டது. கோவை வழியாக சென்னை சென்று பின்னர் பெங்களூருக்குராஜ்குமார் அழைத்து வரப்படுவார் என்று கர்நாடக மாநில மூத்த போலீஸ் அதிகாரிஒருவர் கூறியுள்ளார்.
போலீஸ் உஷார்:
இதற்கிடையே, ராஜ்குமார் விடுவிக்கப்பட்டால், அவரது ரசிகர்கள் அசம்பாவிதச்செயல்களில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.எனவே காட்டிலிருந்து வெளியேவருவதற்கு முன்பே, கன்னட மக்கள் எந்தவித அசம்பாவிதச் சம்பவத்திலும் ஈடுபடக்கூடாது என்று ராஜ்குமார் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் அந்த போலீஸ்அதிகாரி கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications