கருணாநிதி போக்கு .. சங்கடப்படுகிறார் ராமதாஸ்
ஈரோடு:
வாழப்பாடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நீக்கும் அதிகாரம்இருந்தாலும், கருணாநதி கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இது என்னை மனச்சங்கடத்திற்குள்ளாக்கி வருகிறது என ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் தெரிவித்தார்.
ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
தேர்தல் முடிந்த கையோடு வாழப்பாடி ராமர்த்தி தொடர்ந்து என்னைத் தாக்கிப் பேசிவருகிறார். இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டத்திலேயேபுகார் தெரிவித்தேன். இந்த மோதல் விவகாரம் குறித்து தமிழகத்தில் ஜனநாயகக்கூட்டணித் தலைவராக உள்ள முதல்வர் கருணாநிதியிடம் மூன்று முறை நேரில் சந்தித்துபுகார் கூறினேன்.
இரண்டு பேரையும் அழைத்துப் பேசிய அவர், இனி ராமமூர்த்தி, தாக்கிப் பேசமாட்டார் என உறுதிமொழி அளித்தார். ஆனால் இதன் பின்னரும் ராமமூர்த்தி தாக்கிப்பேசி வந்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் வாழப்பாடிராமமூர்த்தி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் கூட்டணியில் உள்ளாரா,இல்லையா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அக் கூட்டத்திலேயே என்னைத் தாக்கிப் பேசினால், கூட்டணியிலிருந்து நீக்கும்அதிகாரம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. இதனை கூட்டத்தில் கலந்து கொண்டஅனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். இதன் பின்னரும் வாழப்பாடிஎன்னைத் தாக்கிப் பேசி வந்தார்.
இதனை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, அவர் வாழப்பாடியைஅழைக்காமலேயே ஒரு கூட்டத்தைக் கூட்டி, அவரை நீக்கியதாக அறிவிக்கலாம் எனக்கூறினார். இந்தக் கூட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் கூட்டம்கூட்டப்படவில்லை.
மோதலின் உச்சக்கட்டமாக மூன்று எம்.பி. இடங்களுக்கு ரூ.2.5 கோடி கேட்டதாகவாழப்பாடி கூறியுள்ளார். இது உளறலின் உச்சக் கட்டமாக உள்ளது. இப்போது தேசியஜனநாயகக் கூட்டணியின் தலைவர் நான் இல்லை என முதல்வர் கூறுவது எந்தவகையிலும் நியாயமும் இல்லை.
இது என்னை மனச் சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது. எனவே, இந்த நியாயத்தைமுதல்வரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
பா.ம.கா. அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது. இதனைப்பொறுக்க முடியாமல், அரசு எங்கள் மீது பொய் வழக்குப் போடுகிறது. பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பதாகக் கூறி ஒன்றிய அளவில் உள்ள எங்களதுதொண்டர்களையும் நிர்வாகிகளையும், கட்சிப் பெயர் இன்றி சிறையில்தள்ளுகின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்துவருகிறோம். சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் எங்களது நிலை குறித்துஅறிவிப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications