அல்லையன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளி
டெல்லி:
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அல்லையன்ஸ் ஏர் நிறுவனவிமானத்தில் வெடிகுண்டுப் புரளி ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஜோத்பூருக்கு திங்கள்கிழமை காலை இவ்விமானம் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்து கொண்டிருந்தபோதே விமானத்தில்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மற்றொரு விமானத்திலிருந்து தகவல் வந்தது.
இதையடுத்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜோத்பூர் விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் எல்லாம் கீழேஇறக்கப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து விமானம் முழுவதும் தீவிர சோதனைநடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்துவெடிகுண்டுத் தகவல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து ஜோத்பூரிலிருந்து உதய்பூர், மும்பை நகரங்களுக்குச் செல்லவேண்டியவிமானங்கள் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications