சுவிஸ், இத்தாலியில் கடும் வெள்ளம்: 20 பேர் பலி, பலரைக் காணவில்லை
சூரிச்:
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர்.
ஐரோப்பிய கண்டத்தின் மத்தியில் செல்லும் ஆல்ப்ஸ் மலையின் தெற்குப் பகுதியில்கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், ஆல்ப்ஸ் மலையின்தென் பகுதியில் உள்ள நாடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் வெள்ளத்தால் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் மட்டும் 13 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் 7பேர் இறந்துள்ளனர்.
இரு நாடுகளில் வெள்ளத்தால் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண்சரிவுகள்ஏற்பட்டுள்ளன. அவற்றில் பலர் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் பலர் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் எல்லாம் அபாய கட்டத்தைக் கடந்து வெள்ளம் ஓடுகிறது. இதனால்,கரையோரப் பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிர நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் மின்சப்ளைதுண்டிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் அவசரநிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந் நாட்டில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications