மே.இ. தீவுகள் அணிக்கு மீண்டும் வருகிறார் ஹூப்பர்!
செயின்ட் ஜான்ஸ் (ஆன்டிகுவா):
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மீண்டும் விளையாட கார்ல் ஹூப்பர் விருப்பம்தெரிவித்துள்ளார்.
சிறந்த ஆல்-ரவுண்டராகக் கருதப்பட்ட கார்ல் ஹூப்பர், மேற்கிந்தியத் தீவுகள்அணிக்காக பல டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலதுகையால் பேட்டிங் செய்து இடது கையால் சுழற்பந்து வீசும் ஹூப்பர் 1999-ம் ஆண்டுசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
34 வயதான அவர் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விருப்பம்தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் விவியன்ரிச்சட்ஸும், ஹூப்பர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பவேண்டும் என்றுஅழைப்பு விடுத்தார்.
இதையடுத்து தனது ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டு மீண்டும்மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.
என்னால் மீண்டும் நன்றாக விளையாட முடியும் என்று கருதுகிறேன். ஓய்வுபெற்றதால்எனது திறமை குறைந்துவிடவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக நான்விளையாடவேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்பி என்னைத் தேர்வு செய்தால் நான்நிச்சயம் விளையாடுவேன்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நான் விளையாடுவது என்பது தேர்வாளர்களின்கையில்தான் உள்ளது என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஹூப்பர்ஓய்வுபெற்றாலும், ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர்விளையாடி வருகிறார். அது தவிர கயானா அணிக்காகவும் அவர் விளையாடிவருகிறார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி பயணம்மேற்கொள்கிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டித் தொடரில் 3-1என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து ஹூப்பர் தேர்வு செய்யப்பட்டால் ஓரளவு திறமையான அணியாகமேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியா செல்லும் என்று கிரிக்கெட் உலக ரசிகர்கள்கருதுகின்றனர். ஒரு சிலர் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கவேண்டும் என்றும்கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications