டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன்
சென்னை:
கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை முன் ஜாமீன்வழங்கியது.
கிருஷ்ணசாமியின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகிஅவரிடம் இம் மாத இறுதிக்குள் ரூ. 10 ஆயிரம் ஜாமீன் தொகையைக்கட்டவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார்.
அதே நேரத்தில், கிருஷ்ணசாமி ஆஜரான பிறகு நவம்பர் 30-ம் தேதியோஅல்லது அதற்குள்ளோ இந்த வழக்கை திருநெல்வேலி செசன்ஸ்நீதிமன்றத்துக்கு மாற்றும்படி அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட்டுக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
1998-ம் ஆண்டு மாஞ்சாலை டீ எஸ்டேட்டில் தொழிலாளர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த எஸ்டேட்சூப்பர்வைசர் அந்தோணி முத்து கொலை செய்யப்பட்டார்.
இக் கொலை தொடர்பாக கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 11 பேரையும் கைது செய்யும்படி அம்பாசமுத்திரம்மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்தார். இதில் கிருஷ்ணசாமி தவிரமற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் முன் ஜாமீன் கேட்டுசென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.ஆனால், கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அந்தோனி முத்துவின் மனைவி அந்தோனி அம்மாள் மனுத்தாக்கல் செய்தார்.
இம் மனுவை ஏற்று கிருஷ்ணசாமிக்கு எதிரான கைது வாரண்டைஅமல்படுத்தும்படி போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இதை எதிர்த்து கைது வாரண்டை வாபஸ் பெறக் கோரியும்,தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படியும் கிருஷ்ணசாமி மனு தாக்கல்செய்தார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
