தூதர்களிடையே "ஈகோ மோதலால் ராஜ்குமார் விடுதலை தாமதம்?
சென்னை:
கடைசியாக கிடைத்த தகவல் படி நடிகர் ராஜ்குமார் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டு விட்டதாகவும்,செவ்வாய்க் கிழமை பகல் 2 மணியளவில் அவர் சென்னை வந்து சேருவார் என்றும் தமிழக போலீஸ்வட்டாரம் தெரிவித்தது. ஆனால், நக்கீரன் அலுவலகம் இதை மறுத்துள்ளது.
நடிகர் ராஜ்குமார் விடுதலை தொடர்பான பரபரப்பான குழப்பம் நிலவும் சூழ்நிலையில், தமிழகடி.ஜி.பி. அலுவலகம் மிகவும் பிஸியாக இருந்தது. போலீஸ் உயரதிகாரிகள் டிஸ்கஸனில்மூழ்கியுள்ளனர்.
புதிய தூதுக்குழுவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக திங்கள் இரவு 7மணியளவில் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் காட்டுப் பகுதியை விட்டுவெளியே வந்து கொண்டு இருப்பதாகவும் சென்னை போலீஸ் வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
அவர்கள் அதிகாலையில் தான் சத்தியமங்கலம் ஊர்ப் பகுதியை அடைய முடியும். அங்கேடாக்டர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக ராஜ்குமாருக்குதேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பார்கள். அதன் பின்னர் அவர் கார் மூலம் சென்னைகொண்டு வரப்படுவார். எனவே செவ்வாய் மதியம் 2 மணியளவில் ராஜ்குமார் சென்னை வந்துவிடுவார் என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
ஆனால், இந்த தகவல்களை திங்கள் இரவில் நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மறுத்தது.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை என்றனர்.
இதற்கிடையில் புதிய தூதுக் குழுவுக்கு யார் தலைமை என்பதில் புகைச்சல் தொடங்கியுள்ளது.தமிழகத்திலுள்ள எல்லா பத்திரிகைகளும் "நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் என்றுஎழுதத் துவங்கி விட்டன. இதனால் சென்னையில் திங்கள் மாலை வெளியான நக்கீரன் செய்திக்குறிப்பில் ""நக்கீரன் கோபால் தலைமையிலான தூதுக்குழுவினர் என்ற வார்த்தை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த புகைச்சல் பெரும் சர்ச்சையாக வளரும் எனத் தெரிகிறது.
இன்று அல்லது நாளை வருவார் - கருணாநிதி
இதற்கிடையே, ராஜ்குமார் திங்கள்கிழ இரவு அல்லது செவ்வாய்க்கிழமை விடுதலையாகலாம் என்றுதமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அவரைச் சந்தித்த நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில், ராஜ்குமார் திங்கள்கிழமை இரவுஅல்லது செவ்வாய்க்கிழமை விடுதலையாகி வரலாம் என்றார்.
இதற்கிடையே, அரசுத் தூதர் கோபாலுக்கும், நெடுமாறனுக்கும் இடையே, யார் ராஜ்குமாரை கூட்டிச்செல்வது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுவதால், இரு தரப்பினருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்றுஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, கோபால், ராஜ்குமாரையும், ஒரு பினைக் கைதியையும் கூட்டிச் செல்வது, மீதமுள்ள பினைக்கைதியை நெடுமாறன் குழுவினர் கூட்டிச் செல்வது எனவும் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
அனைவரும் விடுவிக்கப்பட்டதான செய்தியை நெடுமாறன் வெளியிடுவார் என்றும் அதன் பிறகுராஜ்குமாரை கோபால் அழைத்து வருவது எனவும் அவர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications