ரஜினி வீட்டில் ராஜ்குமார் குடும்பத்தினர்
சென்னை:
தமிழ்நாடு தலைமைச் செயலகம் ஏக பரபரப்பில் இருக்கிறது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள்அறையில் நிருபர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது.
ராஜ்குமார் இன்று எப்படியும் காட்டில் இருந்து வந்துவிடுவார் நேராக தலைமைச் செயலகத்திற்குத்தான் அழைத்து வருவார்கள்என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் நிருபர்கள்.
ஆனால், தமிழக உயர் அதிகாரிகள் தரப்பில் அனைவருமே மெளனத்தையே பதிலாக தருகிறார்கள். ராஜ்குமாரின் வருகையைநாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.
இதற்கு நடுவே இன்னொரு விஷயம் பரவிக்கொண்டிருக்கிறது. ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ராஜ்குமாரின் மகன்கள்மற்றும் சில உறவினர்கள் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்துவிட்டார்கள் என்றும், அனைவரும் ரஜினிகாந்த் வீட்டில்தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்குமாரின் வருகைக்காக அவர்களும் காத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவின. இதையடுத்து பத்திரிகையாளர்கள்போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கும் படையெடுத்தார்கள். அங்கேயும் உறுதியான தகவல்கள் ஏதும்கிடைக்கவில்லை. அதனால் தகவலை உறுதி செய்ய முடியாமலேயே திரும்பினார்கள்.
ரஜினி உட்பட, ராஜ்குமார் உறவினர்கள் அனைவரும் ராஜ்குமார் இன்று எப்படியும் திரும்பி விடுவார் என்று ரஜினிகாந்தின்இல்லத்தில் காத்திருப்பதாகத் தெரிகிறது.
ஏதுவுமே இப்பொழுது சொல்ல முடியாது. நாங்களும் உங்களைப்போலவே வருகின்ற தகவல்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம்என்கிறார்கள் அதிகாரிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications